WhatsApp | 9087316855
Advertise

கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வரப்பெற்ற 5000 புதிய  வாக்குப்பதிவு இயந்திரங்கள்மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வை

கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வரப்பெற்ற 5000 புதிய  வாக்குப்பதிவு சரிபார்ப்பு  இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் இருப்பு வைக்கப்படுவதை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில்  மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.கிராந்திகுமார்பாடி ..., அவர்கள் நேரில் பார்வையிட்டார்.

கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வரப்பெற்ற 5000 புதிய வாக்குப்பதிவு சரிபார்ப்பு  இயந்திரங்கள் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள பாதுகாப்பு அறையில் இருப்பு வைக்கப்படுவதை இன்று (05.04.2023) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில்  மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.கிராந்திகுமார்பாடி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டார். இந்நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) (பொ) குணசேகரன், தனி வட்டாட்சியர் (தேர்தல்) விஜயலெட்சுமி, மற்றும் அரசியல் கட்சிபிரமுகர்கள் உடனிருந்தனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தேர்தல் பயன்பாட்டிற்கொன்று 7,579 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 4,436 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு எந்திரங்களும், 1310 வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.  மேலும் தற்போது,  கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு பெங்களுர் பெல் நிறுவனத்திலிருந்து வரப்பெற்ற 5000 புதிய வாக்குப்பதிவு சரிபார்ப்பு  இயந்திரங்கள், தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள பாதுகாப்பு அறையில் இருப்பு வைக்கப்பட்டு வருவதை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டார்.

வெளியீடுசெய்திமக்கள்தொடர்புஅலுவலர், கோயம்புத்தூர்மாவட்டம்

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe