கோவையில் கலெக்டர் தலைமையில் பழங்குடியினருக்கு இணையவழியில் சாதிச்சான்றிதழ்களை விரைவாக வழங்குதல் தொடர்பாக பயிற்சி கூட்டம்
கோயம்புத்தூர் மாவட்டம்
பழங்குடியினருக்கு இணையவழியில் சாதிச் சான்றிதழ்களை விரைவாக வழங்குதல் தொடர்பாக சார் ஆட்சியர்கள் மற்றும் கோட்டாட்சியர்களுக்கான மண்டல அளவிலான பயிற்சி கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார்பாடி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
——————————————————————————————————————————————————————–
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(08.04.2023) பழங்குடியினருக்கு இணையவழியில் சாதிச் சான்றிதழ்களை விரைவாக வழங்குதல் தொடர்பாக சார் ஆட்சியர்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்களுக்கான மண்டல அளவிலான பயிற்சி கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார்பாடி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மண்டல அளவிலான பயிற்சியை மானுடவியலாளரான முனைவர் ச.காளிதாஸ் அவர்கள் பயிற்சி வழங்கினார். இப்பயிற்சிவகுப்பில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் திருமதி.பிரியங்கா இ.ஆ.ப., திருப்பூர் சார் ஆட்சியர் திரு.ஸ்ருதஞ்ஜெய் நாராயணன் இ.ஆ.ப., வருவாய் கோட்டாட்சியர்கள் திரு.பண்டரிநாதன், திரு.கோவிந்தன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) / மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் (பொ) திரு.சுரேஷ், மற்றும் திருப்பூர், நீலகிரி மாவட்ட வருவாய் கோட்டாட்சியர்கள் கலந்துகொண்டனர்.
இப்பயிற்சி வகுப்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,
பழங்குடியினருக்கு இணையவழியில் சாதிச் சான்றிதழ்களை விரைவாக வழங்குதல் தொடர்பாக கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களின் சார் ஆட்சியர்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்களுக்கான மண்டல அளவிலான பயிற்சி கூட்டம் இன்றைய தினம் நடத்தப்பட்டுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் சாதி சான்றிதழ்கள் வழங்குதல் விரைவு படுத்துதல் குறித்தும், மெய்த்தன்மை அறிதல் குறித்தும் விளக்கப்படவுள்ளது.
பழங்குடியின மக்கள், கடந்த காலங்களில் அவர்களின் சொந்த வாழ்விடங்களில் வாழ்ந்து வந்தனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்த இடங்களில் வாழ்வார்கள், அவர்களின் கலாச்சாரம், மொழி பற்றி அறிந்துகொள்வதும் பழங்குடியின சாதிசான்றிதழ் வழங்குவதும் எளிதாக இருந்தது. ஆனால் தற்போதைய காலத்தில் அவர்களின் சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து நகரங்களில் வாழ்கின்றனர். நவீன கல்வி பயின்ற பழங்குடியின மக்களின் பேசும் மொழி, கலாச்சாரங்கள் மாறிஉள்ளது.
பழங்குடியின மக்களின் பூர்வீகம், வனம் அல்லது மலைப்பகுதிகளாக இருந்தாலும், குழந்தைகளின் படிப்பு, வேலை, விஷயமாக நகரங்களுக்கு இடம் பெயர்கின்றனர். மேலும், பழங்குடியின மக்களுக்கு சாதிசான்றிதழ் வழங்கும்போது, சரியானவர்களுக்கு உரிய காலத்தில் விரைவாக வழங்கவேண்டும். சான்றிதழ்கள் வழங்க தேவையில்லாமல் காலதாமதம் செய்யக்கூடாது.
பழங்குடியினர் ஏதாவது,ஒரு அரசுப் பணியில் இருக்கலாம், படித்துகொண்டு இருக்கலாம், அவர்களுக்கு அந்த சான்றிதழ் மிக அவசியமானதாகும். பழங்குடியினர் சான்றிதழ் மெய்த்தன்மை சரிபார்த்தல் தொடர்பாக கண்காணிப்பு விசாரணையை விரைவுபடுத்தவேண்டும். இப்பயிற்சி வகுப்பினை நன்முறையில்பயன்படுத்தி சான்றிதழ்களை விரைவாக வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
வெளியீடு-செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், கோயம்புத்தூர் மாவட்டம்