WhatsApp | 9087316855
Advertise

16th Annual General Committee Meeting and Inauguration of New Executives of ACROAC

அக்ரக் சங்கத்தின் 16ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா 

ஏர் கண்டிஷனிங் அண்டு ரெப்ரிஜிரேஷன் ஓனர்ஸ் அசோசியேஷன் கோவை மாவட்டத்தின் 16ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள கோ இண்டியா அரங்கில் நடைபெற்றது.  

நிகழ்ச்சியின், தொடக்கமாக அக்ரக் சங்கத்தின் கொடி ஏற்றப்பட்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு முன்னால் அக்ரக் தலைவர் முருகன் வாழ்த்துரை வழங்கினார். முன்னால் பொருளாளர் சகாயராஜ் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். 

தொடர்ந்து அக்ரக் சங்கத்தின் சார்பில் ரத்த தானம் செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவ மாணவியர்களுக்கு அக்ரக் சங்கத்தின் சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டது. 

தொடர்ந்து 2024 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்ரக் சங்கத்தின் புதிய தலைவராக அன்சில் நியூனஸ், துணைத் தலைவர் பாலசுப்பிரமணியம், செயலாளர் சதீஷ், இணை செயலாளர் கண்ணன், பொருளாளர் நடராஜ், இணை பொருளாளர் முரளிதரன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக அனைவரின் முன்னிலையில் பதவி ஏற்று கொண்டனர். 

தொடர்ந்து புதிய நிர்வாகிகளிடம் முன்னாள் நிர்வாகிகள் நிதி நிலை அறிக்கை மற்றம் காசோலையை அனைவரும் முன்னிலையில் ஒப்படைத்தனர். இந்நிகழ்வில் முன்னாள் நிர்வாகிகள் தலைவர் முருகன், துணைத் தலைவர் ஆறுமுகம், செயலாளர் அழகிரி மோகன், துணைச்செயலாளர் மதன ராஜன், பொருளாளர் சகாயராஜ், துணைப் பொருளாளர் முஸ்தபா மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe