WhatsApp | 9087316855
Advertise

பன்மொழிகளில் உருவாகும் ‘ரெஜினா’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா

கோவை சரவணம்பட்டியில் உள்ள ப்ரோஜோன் மாலில் ‘ரெஜினா’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா மற்றும் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. 

பன்மொழிகளில் உருவாகும் ‘ரெஜினா’ முதன்மை நடிகையாக சுனைனா நடக்கிறார். இப்படத்தை எல்லோ பியர் புரொடக் ஷன் நிறுவனத்தின் சார்பில், கோவையை சேர்ந்த சதீஷ் நாயர் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இவரே இசை அமைத்து உள்ளார். 

இந்த திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா புரோசோன் மாலில் நடந்தது. நிகழ்ச்சியில் இயக்குனர் டாமின் டி சில்வா, நடிகை சுனைனா, இசையமைப்பாளர் சதீஷ் நாயர், கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்சுவீட் சேர்மன் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  

முன்னதாக பேசிய நடிகை சுனைனா, ரெஜினா படத்தின் கதை  பொறுத்தவரை  அசம்பாவிதம் தொடர்பாக திடீர் என ஒரு சம்பவம் நடைபெறும் அதை வைத்து படத்தை நகர்த்தி உள்ளார்கள். இது ஒரு 

வித்யாசமான பழி வாங்கும் கதை. நான் ஒரு வீட்டுப் பெண்ணாக நடித்துள்ளேன். 2 மாதம் தொடர்ந்து நடித்து உள்ளேன். இதனால் மகிழ்ச்சியாக உள்ளேன். ஒவ்வொரு கதை ஒவ்வொரு மாதிரி இருக்கும் 

இந்த கதை எனக்கு பிடித்து இருந்தது என்றார். 

மேலும், மனிதர்களின் வாழ்க்கையில் பெரும்பாலானவர்கள் நகைச்சுவை, சென்டிமென்ட் என இருந்தாலும் ஒரு சிலர் அதைத்தாண்டி விசித்திரமாக நடந்து கொள்வார்கள். அவர்கள் வாழ்க்கையில் ஏதேனும் கடினமான சம்பவங்கள் நடந்திருந்தால் அதன் அடிப்படையில் வித்தியாசமாக நடந்து கொள்வார்கள். அப்படிப்பட்டவர்களை மையப்படுத்தி தான் இந்தப் படம் உருவாகியுள்ளது” என தெரிவித்தார்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe