WhatsApp | 9087316855
Advertise

27th Annual Sports Festival at Sri Narayana Guru College

ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் 27 ஆவது விளையாட்டு ஆண்டு விழா

கோவை க.கா சாவடியில் அமைந்துள்ள ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் இன்று காலை 27வது விளையாட்டு ஆண்டு விழா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் உடற்கல்வித்துறை இயக்குனர் ஜெயப்பிரகாஷ் வரவேற்புரை வழங்கினார். ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளையின் செயலாளர் ராஜ்குமார் விழாவிற்கு தலைமை தாங்கினார். ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளை பொருளாளர் சஜீஸ்குமார் முன்னிலை வகித்தார்.

இந்தியன் ரயில்வே சர்வதேச ஓட்டப்பந்தய வீராங்கனை சிவ அன்பரசி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்பொழுது அவர்கள் மாணவர்களிடையே பேசுகையில், மாணவர்களுக்கு கல்வியோடு சேர்ந்து விளையாட்டிற்கும் ஆசிரியர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். உடற்கல்வியின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார். விளையாட்டு எதிர்காலத்தில் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்கு மிகவும் பயன்படும் என தெரிவித்தார்.

தொடர்ந்து சிறப்பு விருந்தினர் விளையாட்டு ஆண்டு விழாவின் கொடியினை ஏற்றி வைத்து மாணவர்களின் அணிவகுப்பினை ஏற்று மரியாதை செய்தார் பின்னர் விளையாட்டிக்கான தீப ஒளி ஏற்றி வைக்கப்பட்டது. பின்னர் சமாதான புறாவினை வானில் பறக்க விட்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியினை சிறப்பு விருந்தினர் மற்றும் கல்லூரியின் முதல்வர் கல்பனா ஆகியோர் துவக்கி வைத்தனர். 27வது ஆண்டி விளையாட்டுப் போட்டியில் மாணவர்களுக்கு நடைபெற்ற ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டம், வாலிபால், கால்பந்து போட்டி மற்றும் பேட்மிட்டன் போன்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டது.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe