WhatsApp | 9087316855
Advertise

2nd Convocation at Arjun College of Technology video

அர்ஜுன் தொழில்நுட்பக் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா

“தொழில்நுட்பம் மற்றும் தரம்” மீதான ஆர்வத்தை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்

-காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகத்தின் துணைவேந்தர் டாக்டர்.பி.மன்னர் ஜவஹர் பேச்சு

அர்ஜுன் தொழில்நுட்பக் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா

கோயம்புத்தூர் பொள்ளாச்சி சாலை தாமரைக்குளம் பகுதியில் அமைந்துள்ள அர்ஜுன் தொழில்நுட்பக் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி முதல்வர், பேராசிரியர் டாக்டர் உதயகுமார் ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தார். அர்ஜுன் தொழில்நுட்பக் கல்லூரி தலைவர்
ஆர். சூரியநாராயணன், விழாவிற்கு தலைமை வகித்து பட்டதாரிகளை வாழ்த்தினார்.

விழாவில் முதன்மை விருந்தினராக காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகத்தின் துணைவேந்தர் டாக்டர்.பி.மன்னர் ஜவஹர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார்.

தொடர்ந்து மாணவர்களிடையே அவர் பேசுகையில், “இன்றைய மாணவர்களே ஒரு நாட்டின் நாளைய தலைவர்கள் என்றும் மாணவர்களின் பண்புகளே மாணவர்களின் ஒளிமயமான எதிர்காலத்தையும் நாட்டின் வேகமான வளர்ச்சியையும் தெளிவாகத் தீர்மானிக்கின்றன” என்றார்.

மாணவர்கள் 4 வருடங்கள் இங்கு படித்தால் 40 வருடங்களில் வருடங்களுக்கு மேல் பல்வேறு வாய்ப்புகள் கிடைக்கிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில்
ஆசிரியர்கள் கற்று தருவது 10
சதவீதம் தான், மாணவர்கள் சிந்தனைகளில் 90 சதவீதம்
கற்றுக் கொள்கின்றனர் என்றார். தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டம் வென்ற சிறந்த மாணவர்களை பாராட்டினார். பட்டதாரிகளை அவர்களின் சிறப்புத் துறையில் “தொழில்நுட்பம் மற்றும் தரம்” மீதான ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள ஊக்குவித்தார்.

தொடர்ந்து, கெளரவ விருந்தினர் புகழ்பெற்ற பேச்சாளர் மற்றும் மாற்றம் அறக்கட்டளை
நிறுவனர் & நிர்வாக அறங்காவலர்
ஜே.சுஜித் குமார், பேசுகையில்,
பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை மதிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும், அவர்களின் ஆசீர்வாதங்கள் அவர்களின் வாழ்வில் எவ்வாறு சிறந்து விளங்குகிறது என்பதையும் வலியுறுத்தினார். மேலும், ஒவ்வொரு பட்டதாரிகளும் சமூக சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

பட்டமளிப்பு விழாவில் இளங்கலை மாணவர்கள் 153 பட்டம் பெற்றனர். இதில் பேராசிரியர்கள், பெற்றோர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe