WhatsApp | 9087316855
Advertise

355 petitions were filed in the People’s Grievance Day meeting held in Coimbatore

கோவையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 355 கோரிக்கை மனுக்கள்

செ.வெ.எண்: 15 நாள்:10.04.2023
கோயம்புத்தூர் மாவட்டம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டஆட்சித் தலைவர் திரு.கிராந்திகுமார் பாடிஇ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று (10.04.2023) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலாஅலெக்ஸ், தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் சுரேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்தராம்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, பட்டாமாறுதல், புதிய குடும்ப அட்டை, வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்களிடம் அளித்தனர். பொதுமக்களிடமிருந்து இலவச வீடு வேண்டி 43 மனுக்களும், வீட்டுமனைப் பட்டா வேண்டி 111 மனுக்களும், வேலைவாய்ப்பு வேண்டி 11 மனுக்களும், 190 இதர மனுக்கள் என மொத்தம் 355 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
வெளியீடு-செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், கோயம்புத்தூர் மாவட்டம்

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe