WhatsApp | 9087316855
Advertise

5k Car Care Company Special Offer Announcement for Customers video

5k கார் கேர் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை அறிவிப்பு

கோவை கொடிசியவில் மூன்று நாட்கள் நடைபெறும் வாகனங்கள் தொடர்பான யுனைடெட் ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் 5k கார் கேர் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு 50 சதவீதம் வரை சிறப்பு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.

கோவையை தலைமையிடமாக கொண்ட யுனைடெட் ட்ரேடு ஃபேர்ஸ் இந்தியா நிறுவனம் இரண்டாவது முறையாக ‘யுனைடெட் ஆட்டோ எக்ஸ்போ’ கண்காட்சி  (UNITED AUTO EXPO) கோவை கொடிசியா அரங்கில் இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.

இந்த கண்காட்சியில் கோவையில் சிறப்பாக செயல்பட்டு வரும் 5கே  கார் கேர் நிறுவனம் பங்கேற்றுள்ளது. மேலும் இது கண்காட்சியில் பங்கு பெறும் வாடிக்கையாளர்களுக்கு 5 கே கார் கேர் நிறுவனம் சார்பில் 50 சதவீதம் அதிரடி சலுகைகளை வழங்கி வருகிறது.

இது குறித்து 5 கே கார் கேர் நிறுவனத்தின் அதிகாரி கூறுகையில், கோவை மாவட்டத்தில் தொடங்கப்பட்ட 5கே கார் கேர் நிறுவனம் தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சுமார் 125 கிளைகளை கொண்டுள்ளது. இதில் 25 லட்சம் வாடிக்கையாளர்களையும் 100 க்கு மேற்பட்ட தொழில் முனைவோர்களையும் உருவாக்கி உள்ளது. கண்காட்சியில் 50 சதவீதம் சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது. கார்களுக்கு தேவையான அனைத்து ஆக்சஸரீஸ்களும், நியூ அண்டர் பாடி கோட்டிங் கிளீனர், மற்றும் பல்வேறு சலுகைகளை இக்கண்காட்சியில் வரும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக தெரிவித்தனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe