WhatsApp | 9087316855
Advertise

6th Convocation of Suguna College of Engineering Coimbatore

கோவை சுகுணா பொறியியல் கல்லூரியில் 6வது பட்டமளிப்பு விழா

கோவை சுகுணா பொறியியல் கல்லூரியில் 6வது பட்டமளிப்பு விழா

கோவை சுகுணா பொறியியல் கல்லூரியில் 6வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் தெலுங்கானா மற்றும் பாண்டிச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

இவ்விழாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பேசுகையில்,

பொறியாளர்கள் என்றால் ஒவ்வொரு கருவியையை மிகவும் அழகாக வடிவமைக்க கூடியவர்கள். நம் திறமைகளை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். கோவை மாநகரை நான் வணங்குகிறேன். கொரோனா காலகட்டத்தில் பிபிடி கிட்டை தயாரித்து கொடுத்ததில் கோவையின் பங்கு முக்கியமானது. நீங்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். நிறைய படியுங்கள் உங்களை நீங்களே புதுப்பித்து கொள்ளுங்கள். எல்லாவற்றையும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ளுங்கள்

இவ்வாறு பேசினார்.

இவ்விழாவில்,227 மாணவர்கள் பட்டங்கள் பெற்றனர். சுகுணா கல்வி குழுமங்களின் தலைவர் லட்சுமி நாராயணசாமி தலைமை உரையாற்றினார். கல்லூரி முதல்வர் வரவேற்புரை ஆற்றினார்.
சுகுணா அறக்கட்டளையின் செயலர்
ஸ்ரீகாந்த் கண்ணன் நன்றியுரை ஆற்றினார்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe