WhatsApp | 9087316855
Advertise

77th Foundation Day of Bureau of Indian Standards

இந்தியத் தரநிலைகள் பணியகத்தின் 77வது நிறுவனநாள் விழா

இந்தியத் தரநிலைகள் பணியகத்தின் 77வது நிறுவனநாள் விழா கொண்டாட்டத்தின் தொடக்கவிழா

இந்தியத் தரநிலைகள் பணியகத்தின் ( BIS ) கோயம்புத்தூர் கிளையும் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து நடத்திய இந்தியத் தரநிலைகள் பணியகத்தின் 77வது நிறுவனநாள் விழா கொண்டாட்டத்தின் தொடக்கவிழா கல்லூரி வளாகத்தில் உள்ள முனைவர் மா.ஆறுச்சாமி கலையரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில் கோயம்புத்தூர் , அறிவியல் மற்றும் தொழில்துறை சோதனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மோகன் செந்தில் குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார்.

அவர்தம் உரையில், “இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற பொருட்கள் அனைத்தும் தரமுடையவையாக இருக்க வேண்டும் என்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் இந்தியப் பொருட்கள் நுகர்வோரால் விரும்பி வாங்கப்படும் நிலை உருவாக வேண்டும் என்றும் குறிப்பிட்டார் . அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா உலகளவில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உருவாவதற்கு இந்தியப் பொருட்களின் தரம் இன்றியமையாதது என்றும் குறிப்பாக மாணவ , மாணவியர்களுக்குத் தரம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் டாக்டர் சி.ஏ. வாசுகி இவ்விழாவிற்குத் தலைமையேற்றுத் தலைமையுரையாற்றினார் . அவர்தம் உரையில், ” கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் பொன்விழா ஆண்டில் இந்தியத் தரநிலைகள் பணியகத்தின் 77 ஆவது நிறுவனநாள் விழா கல்லூரியில் கொண்டாடப்படுவதற்கு நன்றிர தெரிவித்தார்.

இந்தியத் தரநிலைகள் பணியகத்தின் கோயம்புத்தூர் கிளையின் தலைவரும் G பிரிவு விஞ்ஞானியுமான கோபிநாத் தொடக்கவுரையாற்றினார் . கல்லூரியின் முதல்வர் லச்சுமணசாமி வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக B பிரிவு விஞ்ஞானி கே.கவின் வரவேற்புரையாற்றினார். இந்தியத் தரநிலைகள் பணியகத்தின் பொறியாளர் திவ்யப்பிரபா நன்றி நவின்றார் .

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe