அருள்மிகு ராஜகணபதி அருள்மிகு சித்தி விநாயகர் அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி அம்மன் திருக்கோவிலில் 8ம் ஆண்டு திருவிழா
அருள்மிகு ராஜகணபதி அருள்மிகு சித்தி விநாயகர் அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி அம்மன் திருக்கோவிலில் 8ம் ஆண்டு திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
கோவை வெள்ளக்கிணறு பகுதியிலுள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி -2 என்ற இடத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ராஜகணபதி, அருள் மிகு சித்தி விநாயகர்,ஸ்ரீ பண்ணாரி அம்மன் திருக்கோவிலில் 8ம் ஆண்டு திருவிழா நடைபெற்றது.
ஸ்ரீ பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு மகா அபிஷேகம்,சிறப்பு ஹோமம், கலசப்புறப்பாடு, சுவாமிகள் மீது தீர்த்தம் விடுதல், பிரச்சாதம் வழங்குதல், இராகு கால துர்க்கை வழிபாடு, தேய்பிறை பஞ்சமி முன்னிட்டு வாராகி அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மகாஅன்னதானம் நடைபெற்றது. மேலும் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு நடைப்பெறும் மிக பிரமாண்டமாக நடத்துவதற்கு திருக்கோவில் விழா கமிட்டியாளர்கள் தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் தலைவர் ரவி, செயலாளர் உதயகுமார், பொருளாளர் மணிமாறன், ஊர் பொதுமக்கள், பக்தர்கள் திருக்கோவில் விழா கமிட்டியாளர்கள் என ஏராளமனோர் கலந்து கொண்டனர்.