WhatsApp | 9087316855
Advertise

A consultative meeting of DMK regional secretaries and councilors of Singanallur constituency at Peelamedu

பீளமேட்டில் சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட திமுக பகுதிக் செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்

10-4-2023, திங்கட்கிழமை காலை 11 மணியளவில், கோவை பீளமேடு அண்ணா நகர் அலுவலகத்தில், கோவை மாநகர் மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட பகுதிக் கழகச் செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம், மாண்புமிகு தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி அவர்களின் வழிகாட்டுதலில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex. எம்எல்ஏ அவர்கள் தலைமையில், சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி பார்வையாளர் கழக நெசவாளர் அணி செயலாளர் எஸ். எல். டி. ப. சச்சிதானந்தம் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், “எங்கள் முதல்வர் – எங்கள் பெருமை”மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களின் சிறப்புப் புகைப்படக் கண்காட்சி, 7-4-2023 முதல் கோவை வ. உ. சி. மைதானத்தில் நடைபெற்று வருவதை யொட்டி, வருகிற 14 – 4 – 2023 அன்று, சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட, கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், கல்லூரியில் பயிலும் இளம் தலைமுறையினர், மாணவ, மாணவிகள்,பொதுமக்கள், ஆகியோர் பங்கேற்பது, திமுகழகத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி, BLA-2 அமைத்தல் முத்தமிழறிஞர் செம்மொழிக் காவலர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா ஜூன் 3 அன்று சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ,. அவர்கள் ஆலோசனைகளை வழங்கினார்.
இக் கூட்டத்தில், தலைமை செயற்குழு உறுப்பினர் வே. பாலசுப்பிரமணியம், சிங்காநல்லூர் பகுதி -2 செயலாளர் சிங்கை மு. சிவா,சிங்காநல்லூர் பகுதி – 3 செயலாளர் ஷேக் அப்துல்லா, பீளமேடு பகுதி -1 செயலாளர் துரை. செந்தமிழ் செல்வன், பீளமேடு பகுதி -2 செயலாளர் மா. நாகராஜ், பீளமேடு பகுதி -3 செயலாளர் இரா. சேரலாதன், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், கோவை மாநகராட்சி கணக்குகள் குழுத் தலைவர் தீபா தளபதி இளங்கோ, சிங்காநல்லூர் பகுதி -1 அவைத்தலைவர் சின்னச்சாமி, மாமன்ற உறுப்பினர்கள் அம்பிகா தனபால், சே.கீதா, ம.அம்சவேணி, ப.சாந்தாமணி, ஆ.சுமித்ரா, தி.ஆதி மகேஸ்வரி, மு.ரேவதி, மே.ராஜேஸ்வரி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe