WhatsApp | 9087316855
Advertise

“A Day with a Farmer” seminar by Young Sapling

இளம் தளிரின் “விவசாயியுடன் ஒரு நாள்” என்ற கருத்தரங்கு

இளம் தளிர் சமூக நல அறக்கட்டளை சார்பில்
மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் சார்ந்த இளம் தளிரின் “விவசாயியுடன் ஒரு நாள்” என்ற கருத்தரங்கு நிகழ்வு

இளம் தளிர் சமூக நல அறக்கட்டளை சார்பில் தமிழகம் முழுவதும் இரத்த தானம், உணவு தானம், மரம் நடுதல் போன்ற சேவைகளை செய்து வருகிறது.
இதுமட்டுமின்றி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்ற பிற செயல்பாடுகளையும் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை தெலுங்குபாளையம் பிரிவில் உள்ள நொய்யல் வனம் பகுதியில் இயற்கை விவசாயம் குறித்து கல்லூரி மாணவர்களுக்கு இலவச ஒரு நாள் பயிற்சி வழங்கப்பட்டது.

இதில் இயற்கை விவசாயி ராஜா சிதம்பரம் மாணவர்களுக்கு, இயற்கை விவசாயம் வாழ்விற்கு எவ்வளவு முக்கியத்துவம் என்பதனையும், விவசாயத்தின் அடிப்படை, இயற்கையின் முக்கியத்துவம், வாழ்வில் ஆரோக்கியம் மற்றும் அடுத்த தலைமுறைக்கும் விவசாயம் எடுத்து செல்லுதல் போன்றவற்றை எடுத்துரைத்தார். மேலும் நொய்யல் வனத்தில் உள்ள வாழை, தென்னை, மரங்கள், செடிகள் மற்றும் கொடிகள் குறித்து விளக்கியும் அவற்றில் ஏற்படும் நன்மைகள் மற்றும் லாபகரமான விஷயங்களை எடுத்துக் கூறினார். மேலும் மண்ணின் முக்கியத்துவம், விவசாயிகளின் பணிகள் மற்றும் நீர்நிலை முக்கியத்துவம் போன்றவற்றையும் விளக்கி கூறினார். குறிப்பாக இன்ஜினியரிங் மாணவர்கள் விவசாயத்திற்கு அக்கறை கொண்டு அடுத்த தலைமுறைக்கு விவசாயத்தை
முன்னெடுத்து செல்ல விவசாயத்திற்கான புதிய செயலியை இன்ஜினியர் மாணவர்கள் ஏற்படுத்த வேண்டும் இதன் மூலம் அனைவரும் விவசாயத்தை புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என்றார். பெற்றோர்களும் வாரத்திற்கு ஒருமுறை விவசாயம் சார்ந்த விஷயங்களை மாணவர்களுக்கு நேரில் சென்று எடுத்துக் கூற வேண்டும் என தெரிவித்தார்

இளம் தளிர் சமூக நல அறக்கட்டளை நிறுவனர் ஹரிஹர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இளம் தளிர் சமூக சேவை அறக்கட்டளை கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளை தமிழகம் முழுவதும் இரத்த தானம், உணவு தானம், மரம் நடுதல் போன்ற சேவைகளை செய்து வருகிறது. ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்வதே இந்த அறக்கட்டளையின் முக்கிய குறிக்கோள். இந்த அறக்கட்டளை முதியோர் மற்றும் குழந்தைகள் வசிக்கும் வகையில் இல்லம் அமைக்க திட்டமிட்டுள்ளது. மேலும் ஆன்லைன் மோசடிகள், சைபர் கிரைம் போன்றவற்றின் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டில் பல விழிப்புணர்வு திட்டங்களை திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், உழவர் தினத்தில் மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் சார்ந்த கருத்தரங்கு இளம் தளிரின் “விவசாயியுடன் ஒரு நாள்” என்ற தலைப்பில் இன்று
நடத்தியது இது போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் எங்களது அறக்கட்டளை சார்பில் தொடர்ந்து நடைபெறும் என்றார்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe