WhatsApp | 9087316855
Advertise

A photo exhibition organized in Coimbatore on the occasion of National Survey Day

தேசிய நிலஅளவை தினத்தை முன்னிட்டு கோவையில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சி

செ.வெ.எண்: 14                                                                                                                         நாள்: 10.04.2023       

கோயம்புத்தூர் மாவட்டம்

தேசிய  நிலஅளவை தினத்தை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள

 புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர்  

திரு.கிராந்திகுமார் பாடி  ..., அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார்

          தேசிய நிலஅளவை தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிலஅளவைகள் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியினை இன்று(10.04.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலாஅலெக்ஸ், உதவி இயக்குநர், நில அளவைகள் துறை கோபாலகிருஷ்ணன், தொழில்நுட்ப மேலாளர் வே.முத்துராஜா மற்றும்  அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

          இந்திய நில அளவைத் துறையின் பிதாமகன் என போற்றப்படும் திரு.வில்லியம் லாம்டன் அவர்களால் பெருங்கோண நில அளவை பணிகள் 10.04.1802 ம் ஆண்டு சென்னை, புனித தோமையார் மலையில் துவங்கப்பட்டது. இதன் நினைவாக ஆண்டுதோறும் ஏப்ரல் 10ம் தேதி தேசிய நிலஅளவை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

          அதன்படி இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிலஅளவைகள் துறையின் சார்பில்  புகைப்படக்கண்காட்சி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் 1858 ஆம் ஆண்டுமுதல்; பயன்படுத்திய நில அளவைக் கருவிகள், வரைபடங்களை பெரியதாகவும், சிறிதாகவும் காண்பிக்கக்கூடிய பெண்டகிராம் கருவி(Pentagram Equipment), பரப்பளவினை அளக்கும் கம்ப்யூட்டிங் ஸ்கேல் கருவிகள், இணை கோடுகளை சரியாக வரைவதற்கு பயன்படும்  பேரலால்ரூர்ல்ஸ் கருவிகள்(Parallel rules), கோண தூர அளவுகளை பதிவு செய்யும் தேடலைட் கருவிகள்;(Theodolite)> பெரிய அளவிலான வரைபடங்களை பெரியதாகவும் சிறியதாகவும் காண்பிக்கும் கருவி உள்ளிட்ட கருவிகளும், கோயம்புத்தூர் மாவட்ட நிலஅளவை வரைபடங்கள், நிலஅளவை ஆவணங்கள், நிலஅளவை நடைமுறை நூல் மற்றும் கருவிகள் உள்ளிட்டவைகளும் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.

வெளியீடுசெய்தி மக்கள் தொடர்பு அலுவலர், கோயம்புத்தூர் மாவட்டம்

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe