WhatsApp | 9087316855
Advertise

A pregnant policeman chases away a pickpocket thief

பிக்பாக்கெட் திருடனை விரட்டிப் பிடித்த கர்ப்பிணி காவலர்: குவியும் பாராட்டுகள்!

சென்னையில் மாநகர பேருந்தில் பிக்பாக்கெட் அடித்த திருடனை, விரட்டிப் பிடித்த கர்ப்பிணி காவலருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணமாக இருந்து வருகின்றன.நேற்றைய தினம் சென்னை மாநகர பேருந்து ஒன்று பேசின்பாலம் ரயில் நிலையத்திலிருந்து கிளம்பி, கே.பி பார்க் பேருந்து நிறுத்தம் நோக்கி வந்துகொண்டிருந்தது. அப்போது, பேருந்தில் பயணித்த பயணி ஒருவரிடமிருந்து இரண்டு பேர் செல்போனை திருடிக்கொண்டு பேருந்திலிருந்து தப்பித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பேருந்திலிருந்த பயணிகள் `திருடன்… திருடன்!’ என்று கூச்சலிட்டிருக்கின்றனர்அந்தப் பேருந்தில் பேசின்பாலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் முதல்நிலைக் காவலர் சுசிலா என்பவர் பயணித்திருக்கிறார். பயணிகள் `திருடன்..!’ என்று கூச்சலிடவும், மூன்று மாத கர்ப்பிணியான காவலர் சுசிலா பேருந்திலிருந்து இறங்கித் தப்பி ஓடிய திருடர்களை விரட்டினார். அதில் ஒரு திருடன் தப்பியோடிய நிலையில்… சுசிலா மற்றொருவனை மடக்கிப் பிடித்தார்.பிடிபட்ட நபர், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஜாபர் ஷெரிப் என்பது தெரியவந்தது. அவரிடமிருந்த செல்போனைப் பறிமுதல் செய்த போலீஸார், அவனைக் கைதுசெய்து சிறையிலடைத்தனர்.மேலும், தப்பியோடிய மற்றொரு குற்றவாளியைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர். கர்ப்பிணியாக இருந்தாலும், திருடனை விரட்டிப் பிடித்த பெண் காவலரின் துணிச்சலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்சென்னை மாநகர கமிஷனர்.சங்கர் ஜிவால், பெண் காவலரின் துணிச்சலைப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.மேலும், புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரன், சுசீலாவின் துணிச்சலை பாராட்டினார் சென்னை வடபழனியில் இருக்கும் சூர்யா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் ஶ்ரீகுமார் பரிசு வழங்கினார்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe