WhatsApp | 9087316855
Advertise

A two-day international seminar on Tamil knowledge traditions in search of the world was held in Coimbatore

கோவையில் இரண்டு நாட்கள் நடைபெற்ற உலகம் தேடும் தமிழ் அறிவு மரபுகள் என்னும் சர்வதேச கருத்தரங்கம்

கோவையில் இரண்டு நாட்கள் நடைபெற்ற உலகம் தேடும் தமிழ் அறிவு மரபுகள் என்னும் சர்வதேச கருத்தரங்கம்

-600க்கும் மேற்பட்ட மாணவ மாணவியரும், பல்வேறு நாடுகளை சேர்ந்த தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.

கோவையைச் சார்ந்த பேராசிரியர் கி.நாச்சிமுத்து மொழி பண்பாட்டு ஆய்வு நிறுவனம், கலைகளின் ஆய்வு நிறுவனம் மற்றும் அரி பவுண்டேஷன் ஆகியவை இணைந்து நடத்தும் உலகம் தேடும் தமிழ் அறிவு மரபுகள் என்னும் சர்வதேச கருத்தரங்கம் கோவை வேளாண்மை பல்கலைக்கழக கலையரங்கத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.

தமிழ் மொழி இலக்கியம், இலக்கணம் பேசுகின்ற மொழி, என்பதை கடந்து, தமிழ் மொழியில் உள்ள அறிவு மரபு சார்ந்த கருத்துக்களை வெளிப்படுத்துவதற்காகவும் அதனை இளைய தலைமுறையினரிடம் அறிமுகப்படுத்துவதற்காகவும் இந்த பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.

இதன் துவக்க விழாவில்,
தொடர்ந்து நடைபெற்ற
அமர்வுகளில் பல்வேறு தலைப்புகளில் தமிழரின் வாழ்த்து முறைகள், தமிழரின் வாழ்வியல் ஒழுக்கங்கள், சித்த மருத்துவமும் தற்க அறிவும், யோகம்-ஆன்மீகம்- வாழ்வியல் வெற்றிக்கு, மூலாதாரம் பற்றிய தமிழ் மொழி மரபுசார் சிந்தனைகள், தமிழும் அறிவுசார் நூல்களும், தமிழரின் சித்த மருத்துவம் என ஒவ்வொரு அமர்விற்கும் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்த பன்னாட்டு கருத்தரங்கில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி ஓய்வு பெற்ற தமிழ் துறை தலைவர் சண்முகம், பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி தமிழ்த்துறை இணை பேராசிரியர் ரேணுகா, பேராசிரியர் கி நாச்சிமுத்து மொழி பண்பாட்டு ஆய்வு நிறுவனம் அசோக்குமார், ஈரோடு வெள்ளாளர் கல்லூரி ஓய்வு பெற்ற ஆங்கிலத்துறை பேராசிரியர் கண்ணம்மா, பன்னாட்டு கருத்தரங்க இணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.சி கதிரவன் மற்றும் கோவையைச் சுற்றியுள்ள கல்லூரிகளின் 600 மாணவ மாணவியரும், இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, இத்தாலி, இலங்கையச் சார்ந்த தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe