WhatsApp | 9087316855
Advertise

ACG Community Service Award 2021 to Dr. V G Mohan Prasad – video

டாக்டர் வி ஜி மோகன் பிரசாத்திற்கு எ.சி.ஜியின் 2021ம் ஆண்டிற்கான சமூக சேவை விருது

டாக்டர் வி ஜி மோகன் பிரசாத்திற்கு எ.சி.ஜியின் 2021ம் ஆண்டிற்கான சமூக சேவை விருது

கோவை சிங்காநல்லூர் சாலையில் உள்ள விஜிஎம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் வி ஜி மோகன் பிரசாத்திற்கு அமெரிக்கன் காலேஜ் ஆப் காஸ்ட்ரோ என்டேரோலஜி இயக்கத்தின் 2021ம் ஆண்டிற்கான சமூக சேவை விருது வழங்கப்பட்டது.

இந்த விருது சமூக சேவையில் உலகத்திலேயே சிறந்து விளங்கும் மருத்துவருக்கு ஆண்டிற்க்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. உலகளாவிய எ.சி.ஜி என்னும் இந்த இயக்கத்தில் 11,000 க்கும் மேற்பட்ட வயிற்று நிபுணர்கள் உள்ளன. இந்நிலையில், எ.சி.ஜியின் ஆளுநர் டாக்டர் பிரசாத் ஐயர் இந்த விருதை டாக்டர் வி ஜி மோகன் பிரசாத்திற்கு இன்று வழங்கினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் வி ஜி மோகன் பிரசாத், இந்தியாவில் இரண்டாவது முறையாக இந்த விருது எனக்கு கிடைத்துள்ளது. பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவருக்கு இலவச ஹெப்பாடிட்டீஸ் பிசி வைரஸ் பரிசோதனையும், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சையும் இலவச மருத்துவ முகாம் மற்றும் சிகிச்சை நடத்தியதற்காக இந்த உயரிய விருது கிடைத்தது. எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

உடல் பருமன் குறித்த தேசிய மாநாடு வரும் ஞாயிற்றுக்கிழமை கோவை வி.ஜி.எம் மருத்துவமனையில் நடைபெற உள்ளது. இதில் 12 நாடுகளை சேர்ந்த மருத்துவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
உணவுபாதை எதுகளிப்பு நோயை சமாளிக்க அறுவை சிகிச்சை இல்லாமல் தெரபியூடிக் என்டோஸ்கோபி மூலம் சிகிச்சை அளிப்பவை குறித்து நேரடி ஸ்ட்ரீமிங் மூலம் சர்வதேச மற்றும் தேசிய ஆசிரியர்களால் நிரூபிக்கப்படும் என்றார்.

இந்த நிகழ்வில், வி.ஜி.எம் மருத்துவமனைையின் மருத்துவர்கள் சுமன், மதுரா பிரசாத், வம்சி, மித்ரபிரசாத் மற்றும் அலையன்ஸ் எஸ்.பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe