அக்ரி இன்டெக்ஸ் 2023 வேளாண் கண்காட்சி கோவை கொடிசியா வளாகத்தில் வரும் ஜூலை 14 ந்தேதி துவக்கம்
அக்ரி இன்டெக்ஸ் 2023 வேளாண் கண்காட்சி கோவை கொடிசியா வளாகத்தில் வரும் ஜூலை 14 ந்தேதி துவக்கம்
இந்தியாவின் முதன்மையான வேளாண் வணிக கண்காட்சிகளில் ஒன்றான அக்ரி இன்டெக்ஸ் 2023 வேளாண் கண்காட்சி கோவை கொடிசியா வளாகத்தில் ஜூலை 14 ந்தேதி துவங்க உள்ளது.21 வது பதிப்பாக நடைபெறும் இந்த கண்காட்சியை தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் வீட்டு வசதி நகர்புற வளர்ச்சி,மது விலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் முத்துச்சாமி ஆகியோர் துவக்கி வைக்க உள்ளனர்.
இந்நிலையில் இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவையில் நடைபெற்றது.இதில் கண்காட்சியின் தலைவர் தினேஷ் குமார்,கொடிசியா தலைவர் திருஞானம், மற்றும் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக துணை வேந்தர் கீதா லட்சுமி ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.
அப்போது பேசிய அவர்கள், 21 வது பதிப்பாக நடைபெறும் விவசாய கண்காட்சி ,14 ந்தேதி துவங்கி 17 ந்தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ளதாகவும், துல்லிய வேளாண்மை மற்றும் நுண் நீர் பாசனம் மூலம் இந்திய வேளாண்மையில் மாற்றங்களை உருவாக்குதல் என்ற நோக்கத்தில் நடைபெற உள்ள கண்காட்சியில் இதில், கொரியா, இஸ்ரேல்,, ஜப்பான், ஸ்வீடன் , பிரான்ஸ்,ஆகிய நாடுகளில் இருந்தும் , மகாராஷ்டிரம், குஜராத், பஞ்சாப், மத்தியப் பிரதேசம், ஆந்திரம், சத்தீஸ்கர் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நவீன தொழில் நுட்பம் சார்ந்த வேளாண் சார்ந்த நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தனர்.