WhatsApp | 9087316855
Advertise

LIFE INSURANCE AGENTS’ FEDERATION OF INDIA – Singanallur Branch General Body Meeting

அகில இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக முகவர் சம்மேளனம் -சிங்காநல்லூர் கிளை பொதுக்குழு கூட்டம்

அகில இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக முகவர் சம்மேளனம் -சிங்காநல்லூர் கிளை சார்பில்,  – கோவை அண்ணா சிலை அருகே உள்ள ஆர்த்ரா ஹாலில்  – பொதுக்குழு கூட்டமும், 25 ஆண்டுகளுக்கு மேல் பணி முடித்த முகவர்களுக்கு “முகவர் திலகம்” விருது வழங்கும் நிகழ்ச்சியும்  சிறப்புடன்  நடைபெற்றது.  

விழாவில், சிங்காநல்லூர் முகவர் சங்கத்தின் துணைத் தலைவர் M. ராஜாராம் வரவேற்புரை வழங்கினார்.   தலைவர்  மோகன் தலைமை உரையாற்றினார். செயலாளர்  J. மரியசந்தோசம் சங்கத்தின் ஆண்டு அறிக்கியை விவரமாக எடுத்துரைத்தார்.   பொருளாளர்   V  வேலுச்சாமி நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தார்.  லியாபி  கோவை கோட்டத்தின் தலைவர்  G.V.  குமணன், சிறப்புரை வழங்கினார்,  துணை தலைவர்கள்  M  ராமசாமி  (SINGANALLUR)   , N.  ராமசாமி (PODANUR)  பொருளாளர் V.  சந்திரசேகரன், அகில இந்திய செயற்குழு உறுப்பினர் N.   முருகானந்தம்  மற்றும்  முன்னாள்    கோட்ட  மற்றும் கிளை  தலைவருமாகிய  S.நடராஜன்   வாழ்த்துரை வழங்கினார்.

LIC  சிங்காநல்லூர் கிளை  முதுநிலை கிளை மேலாளர் S. ஜெப சிங்,  ஒண்டிப்புதூர் கிளை மேலாளர்  ரமேஷ் குமார், சிங்காநல்லூர் உதவி கிளை மேலாளர்  K.N. கருப்புசாமி ஆகியோர்  சிறப்புரையாற்றினர். முன்னாள்  கிளை தலைவர் C. தேவராஜ் . செயலாளர் ஜீவா பாலகிருஷ்ணன் மற்றும் இன்றய கிளை சங்க பொறுப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் இதர கிளைகளில் இருந்து பெரும் வாரியாக பொறுப்பாளர்கள் மற்றும் சிங்காநல்லூர் கிளையின் இரு பால் முகவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். 

மேலும் அணைத்து  முகவர்களையும் ஊக்குவிக்கும் விதத்தில் –  சிறப்பு பயிற்சி வகுப்பு   Dr,  செல்வம்,  பயிற்சியாளர்   அவர்களால் நடத்தப்பட்டது.    V . கணேசன், கோட்ட  செயற்குழு உறுப்பினர் நன்றி உரையுடன்  விழா  இனிதே முடிவுற்றது

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe