WhatsApp | 9087316855
Advertise

Altigreen opens second dealership in Tamil Nadu in Coimbatore video

அல்டிகிரீன் தமிழ்நாட்டில் இரண்டாவது டீலர்ஷிப் கோவையில் துவக்கம்

இந்தியாவின் முன்னணி வணிக மின்வாகன உற்பத்தியாளரான அல்டிகிரீன், கோவையில் புதிய அனுபவ மையத்தை துவக்கியுள்ளது. நாடு முழுவதும் 90 நாட்களில் துவக்கப்பட்ட சில்லறை விற்பனை டீலர்களில் இது 10வது ஆகும். வணிக பயன்பாட்டிற்கு மின்வாகனம் வாங்க விரும்புவோருக்கு இந்த மையம் புதிய அனுபவத்தை தரும். சக்தி சாரதா நிறுவனத்தை பங்குதாரராக கொண்டு கோவை கணபதியில் இந்த மையம் துவக்கப்பட்டுள்ளது.

கோவையில் துவக்கப்பட்டுள்ள அல்டிகிரீன் அனுபவ மையத்தினை, சக்தி குழுமத்தின் தலைவர் டாக்டர் என்.எம் மாணிக்கம் துவக்கி வைத்தார். சர்வதேச தரத்திலான அடிப்படை கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட இந்த மையம், அல்டிகிரீன் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சிறப்பான சேவையை வழங்கி வருகிறது.

இது குறித்து அல்டிகிரீன் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிறுவனர் டாக்டர் அமிதாப் சரண் பேசுகையில், “கோவையில் தமிழ்நாட்டில் துவக்கப்பட்டுள்ள இந்த இரண்டாவது டீலர்ஷிப், இந்த மாநிலத்தில் உள்ள விற்பனை வாய்ப்புகளை பயன்படுத்தும் வகையில் அமையும். இதற்கு ஏற்ப அமைந்துள்ள அரசுகளின் ஆதரவான கொள்கைகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்தியாவில் இரண்டாம் நிலை நகரங்களில் அதிகரித்து வரும் மின்வாகன விற்பனையை உயர்த்த இது பெரிதும் உதவும். சர்வதேச தரம் வாய்ந்த பன்னோக்கு வாகனங்களின் விற்பனையை கோவையில் சக்தி சாரதா ஏஜென்சியுடன் இணைந்து செயல்படுவதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்,” என்றார்.
சக்திசாரதா நிர்வாக இயக்குனர் டி.கே தனசேகரன் பேசுகையில், “கோவையில் மின்சார வாகன புரட்சியை அல்டிகிரீன் உடன் இணைந்து மேற்கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். சில்லறை விற்பனை மற்றும் ஒரு முன்னணி விநியோகஸ்தராகவும், புதுமையான யோசனைகளை செயல்படுத்துவதிலும் போட்டிகளை சமாளிக்கும் திறன்களையும் பெற்ற நிறுவனமாக உயர்வதில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து திருப்திகரமான சேவையை அளித்து, சர்வதேச வாய்ப்புகளை முதலீடுகளாக மாற்றுவோம். அல்டிகிரீன் உடன் இணைந்து செயல்பட்டு, நிலையான மகிழ்வான வாழ்க்கையை மக்களுக்கு வழங்கவும், மின்வாகனங்களுக்கு அவர்கள் எளிதாக மாறவும் செயல்படுவோம்,” என்றார்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe