WhatsApp | 9087316855
Advertise

American cotton to the Indian textile industry ‘Cotton Day’ highlights values

இந்திய ஜவுளித் தொழிலுக்கு அமெரிக்க பருத்தியின்
மதிப்பை எடுத்துக்காட்டும் ‘பருத்தி தினம்’

கோவை, டிச.16-
சர்வதேச பருத்தி கவுன்சில் (சிசிஐ) கோவையில் அதன் வருடாந்திர பருத்தி தினத்தை இந்த வாரம் நடத்தியது, இதில் அமெரிக்க பருத்தியை பயன்படுத்தி இந்திய ஜவுளித் தொழிலில் ஏற்பட்டுள்ள பரிணாம வளர்ச்சி குறித்த கருத்தரங்கும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சர்வதேச பருத்தில் கவுன்சில் சார்பில் அதன் பிரதிநிதி பியூஷ் நரங் பேசுகையில், உலகளாவிய பருத்தி நுகர்வில் இந்தியாவின் முக்கிய பங்கு, உலகளாவிய மற்றும் இந்திய ஜவுளித் துறைகளில் அமெரிக்க பருத்தியின் போக்கு பற்றிய விரிவாக எடுத்துக்கூறினார்.
இக்கருத்தரங்கில் பேசிய தெற்காசியாவிற்கான சிசிஐ இயக்குனர் வில் பெட்டன்டோர்ப் கூறுகையில், இந்தியாவின் முக்கியத் துறையான ஜவுளித் துறையில் அமெரிக்க பருத்தி முக்கிய பங்கு வகிக்கிறது. புதுமை, பொறுப்பான உற்பத்தி மற்றும் தொழில்நுட்பத்துடன் இணைந்த அமெரிக்க பருத்தியின் உயர் தரமானது உலகளாவிய மற்றும் இந்திய ஜவுளித் தொழில்களின் சிறப்பான எதிர்காலத்திற்கு சிறந்த பங்களிப்பை வழங்கி வருகிறது. மேலும் அமெரிக்க பருத்தி துறையானது இந்திய ஜவுளி ஆலைகளின் சாதுர்யமிக்க செயல்பாடுகளுடன் இணைந்து இந்தியாவின் முன்னணி ஏற்றுமதி சந்தைகளுக்கு ஒரு சிறந்த, நிலையான மற்றும் உயர்தர உற்பத்தியை அளிக்கிறது என்று தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், தரவு, சேவை மற்றும் நுண்ணறிவு மூலம் அமெரிக்க பருத்தியை வேறுபடுத்தும் புதுமையான திட்டங்களில் காட்டன் யுஎஸ்ஏ சொலூஷனும் ஒன்றாகும். இது அமெரிக்க பருத்தியைப் பயன்படுத்துவதன் மூலம் அது ஒரு ஆலையின் உற்பத்தித்திறன், செயல்திறன் மற்றும் லாபத்தை எவ்வாறு அதிகரிக்கிறது என்பதை அதன் 5 வணிக-கட்டமைப்பு திட்டங்கள் மூலம் தெளிவாக எடுத்துக்கூறுகிறது.
காட்டன் யுஎஸ்ஏ சொலூஷன் அமெரிக்க பருத்தி கொள்முதல் தேவைகளை பூர்த்தி செய்வதோடு, யு.எஸ். காட்டன் டிரஸ்ட் புரோட்டோகால் உறுப்பினராகவும் இருக்கிறது. மேலும் இது நிலையான பருத்தி உற்பத்தியில் ஒரு புதிய தரநிலையை அமைக்கிறது. இந்த அமைப்பு ஜவுளி ஆலைகளுக்கு இலவச ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது. இந்தியாவும் இலங்கையும் 115க்கும் மேற்பட்ட டிரஸ்ட் புரோட்டோகால் உறுப்பினர்களைக் கொண்டுள்ளன.
டிரஸ்ட் புரோட்டோகால், அமெரிக்க பருத்தி உற்பத்தியின் சுற்றுச்சூழல் தன்மைக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு, சரியான இலக்குகள் குறித்தும் கவனம் செலுத்துகிறது. இருப்பினும் எங்கள் அமெரிக்க விவசாயிகள் எப்போதும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத புதிய கண்டுபிடிப்புகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள் என்று பெட்டன்டோர்ப் தெரிவித்தார்.
சுபிமா தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மார்க் லெவ்கோவிட்ஸ் பேசுகையில், நார் பொருட்கள் உற்பத்தியில் அமெரிக்க தொழில்துறை அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுகிறது. டிரஸ்ட் புரோட்டோகால் மற்றும் சுபிமா ஆகியவை இணைந்து வினியோகச் சங்கிலி மற்றும் பண்ணை-நிலை, அறிவியல் அடிப்படையிலான தரவுகளுக்கான சேவைகளை வழங்குதில் இணைந்து செயல்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.
மேலும் அவர் சுபிமாவின் AQRe திட்டத்தையும் அறிமுகம் செய்தார், இது சுபிமா பருத்தியால் செய்யப்பட்ட ஜவுளிகளின் நிகழ்நேர, நம்பகமான மற்றும் பொறுப்பான ஆதாரங்களை எளிதாக்குவதற்கான ஒரு புதிய தளமாகும்.
மேலும் அவர் பேசுகையில், ஆடை மற்றும் வீட்டுப் பொருட்களைத் தயாரிக்கும் ஜவுளித் துறையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் பரந்த அளவிலான பருத்தி உற்பத்தி இருந்தாலும், அமெரிக்க பருத்திக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதுபோன்ற நேரடி சந்திப்புகள் இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான உறவுகளை தொடர்ந்து வலிமைப்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe