WhatsApp | 9087316855
Advertise

Animal Protection National President Vikas Manot offers special pooja for people affected by Cyclone Mikjam in Coimbatore

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கோவையில் விலங்குகள் பாதுகாப்பு தேசிய தலைவர் விகாஸ் மனோட் சிறப்பு யாக பூஜை

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கோவையில் விலங்குகள் பாதுகாப்பு தேசிய தலைவர் விகாஸ் மனோட் சிறப்பு யாக பூஜை

சென்னையை புரட்டி எடுத்த 

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கோவையில் சமூக ஆர்வலர் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு தேசிய தலைவர் விகாஸ் மனோட் சிறப்பு யாக பூஜை நடத்தினார்.

மிக்ஜம் புயல் எதிரொலியால் சென்னையில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கியது. இதனால், பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்தது. இந்நிலையில், சென்னையில் கனமழை காரணமாக மழைநீரில் மூழ்கி, மரங்கள் மற்றும் சுவர்கள் விழுந்து என வெவ்வேறு நிகழ்வுகளில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் வீடுகளில் மழைநீர் புகுந்தது. இந்நிலையில், பொதுமக்கள் பலர் மண்டபங்கள், பள்ளிகளில் தங்கி வருகினறனர். உணவிற்கும், தங்குவதற்கு மிகவும் சிரமத்திற்குள்ளாகினர். குறிப்பாக மழைநீரால் கால்நடைகள் பல உயிரிழந்துள்ளது. எனவே, இத்தகைய பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாப்பதற்காக கோவையில் சமூக ஆர்வலர் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு தேசிய தலைவர் விகாஸ் மனோட் சிறப்பு யாக பூஜையை இன்று ஆடிஸ் வீதியில் உள்ள கோயிலில் நடத்தினார். மேலும், மத்திய, மாநில அரசுகள் இத்தகைய பேரிடர் காலங்களிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்கும், முன்னெச்சரிக்கை நடவடிக்கவும் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe