WhatsApp | 9087316855
Advertise

Art Street in Coimbatore Festival Coimbatore Racecourse Scheme Roads

கோயம்புத்தூர் விழாவின் கோவை ரேஸ்கோர்ஸ் ஸ்கீம் சாலைகளில்  ஆர்ட் ஸ்ட்ரீட்

கோயம்புத்தூர் விழாவின் கோவை ரேஸ்கோர்ஸ் ஸ்கீம் சாலைகளில்  ஆர்ட் ஸ்ட்ரீட் (ART Street)

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தனர்.

கோயம்புத்தூர் விழா 2024 ஜனவரி 2 ஆம் தேதி முதல் அனைவருக்குமான   நிகழ்வுகளுடன் நகரின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. 2018 ஆம் ஆண்டு முதல் கோயம்புத்தூர் விழாவின் 10 வது பதிப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற முக்கிய  நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்படும் கலை தெரு (Art  street ) , இந்த ஆண்டும் நடத்தப்பட்டது.

ஜனவரி 6 மற்றும் 7ம் தேதிகளில் ரேஸ் கோர்ஸ் ஸ்கிம் சாலையில் இன்று காலை 10 மணி அளவில் நடைபெற்றது. இந்த ஆண்டு,  100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தங்கள் கலைப்படைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர். இந்நிகழ்வில்  கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர்.

மணல் ஓவியங்கள் ,தெய்வீக மற்றும் புராண உருவங்களின் கேரள சுவரோவியங்கள், கையால் செய்யப்பட்ட தலைகீழ் கண்ணாடி கலை போன்ற பல்வேறு வகையான கலைகள், கிரியேட்டிவ் கேலிகிராபி, 3-டி மோல்ட்ஸ் மற்றும் , குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர்களின் உருவப்படங்கள் மற்றும் பல காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான ஓவிய பயிற்சி பட்டறைகள் நடைபெற்றது.

ரெட்ரோ ஓவியங்கள் , பிச்சுவாய் பெயிண்டிங், கேலிகிராபி, 3டி மாடலிங், காமிக் ஸ்ட்ரிப், குரோச்செட், களிமண் கலை, மட்பாண்டங்கள், மூங்கில் கூடை நெசவு போன்ற பல கலைப் படைப்புகள் என பல காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe