முதியோருக்கான சர்வதேச தின நாளன்று அதுல்யா சீனியர் கேர் அறிமுகம் செய்யும் “முதியோருக்கு கனிவான பராமரிப்பு” என்ற புதுமையான திட்டம்
கோயம்புத்தர், 1 அக்டோபர், 2023: மூத்த குடிமக்களுக்கான வாழ்விடத் தீர்வுகளை வழங்கும் துறையில் முதன்மை வகிக்கும் அதுல்யா சீனியர் கேர், முதியோருக்கான சர்வதேச அனுசரிப்பையொட்டி அதன் புதிய தனிச்சிறப்பான திட்டத்தை பெருமையுடன் அறிவித்திருக்கிறது. நமது முதியவர்களை அக்கறையுடனும், கனிவுடனும் பராமரிப்பதன் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வை அதிகரிக்கும் ஒரு முயற்சியாக, இந்த விழிப்புணர்வு பரப்புரை திட்டத்தை அதுல்யா சீனியர் கேர் அறிமுகம் செய்திருக்கிறது. சென்னை மாநகரின் முக்கியமான போக்குவரத்து சந்திப்புகளில் முதியோருக்கான பராமரிப்பை முன்னிலைப்படுத்தும் செய்திகள் காண்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
முதியோருக்கான சர்வதேச தினம் என்பது, அக்டோபர் 1-ம் தேதியன்று உலகெங்கிலும் அனுசரிக்கப்படுகிறது. சமுதாயத்திற்கு வயது முதிர்ந்த நபர்கள் வழங்கியிருக்கும் பங்களிப்புகளை உணர்ந்து அங்கீகரிப்பதற்கும் மற்றும் அவர்கள் எதிர்கொள்கின்ற சவால்களுக்கும், சிரமங்களுக்கும் தீர்வுகாண முற்படவும் ஒரு நல்ல வாய்ப்பை வழங்கும் நிகழ்வாக இந்த தினம் அமைகிறது. நமது மூத்த தலைமுறையைச் சேர்ந்த முதியோரை அன்போடும், அக்கறையோடும் பராமரிக்கும் பணி சமூகத்திலுள்ள அனைவரின் பகிரப்படும் பொறுப்பாக இருக்கிறது என்பதை நினைவூட்டுவதற்கு இந்த வாய்ப்பை அதுல்யா சீனியர் கேர் நேர்த்தியாகப் பயன்படுத்தியிருக்கிறது. முக்கிய சாலை சந்திப்புகளை கடந்து செல்லும் அனைவரின் பார்வையையும், கவனத்தையும் ஈர்க்கும் வகையிலும் மற்றும் வலுவான செய்தியை தெரிவித்து, மக்களின் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டுமென்ற நோக்கத்தில் அதுல்யா சீனியர் கேர் – ன் இந்த சிறப்பான பரப்புரை திட்டம் அமைந்திருந்தது.
“முதியோருக்கு கனிவான பராமரிப்பு” (“Caring For A Senior”) என்ற தலைப்பிலான இந்த விளம்பர பரப்புரை திட்டத்தில், மூத்த குடிமக்களுக்கு அன்பையும், ஆதரவையும், மரியாதையையும் வழங்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் செய்திகளும், படங்களும் இடம்பெற்றிருந்தன. நகரில் போக்குவரத்து மிக அதிகமாக நடைபெறும் சந்திப்புகளில் இந்த செய்திகளை தாங்கிய பதாகைகளும், பேனர்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அவைகளை கடந்து செல்லும் பெரும்பாலான நபர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இவைகள் இருந்தன.
அதுல்யா சீனியர் கேர் – ன் இணை நிறுவனர் மற்றும் சந்தையாக்கல் துறையின் இயக்குனர் மிஸ். J. கிருஷ்ண காவ்யா பேசுகையில், “முதியோர்கள் நமது சமூகத்தின் இன்றியமையாத, மதிப்புமிக்க அங்கமாக திகழ்கின்றனர். அவர்களது நலவாழ்வையும், மகிழ்ச்சியையும் உறுதிசெய்வது நம் அனைவரின் கூட்டு பொறுப்பாகவும், கடமையாகவும் இருக்கிறது. இந்த புதுமையான விழிப்புணர்வு பரப்புரை திட்டத்தின் வழியாக நம்மை வளர்த்து ஆளாக்கிய முதியோர்களை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை அனைவருக்கும் நினைவூட்டுவது எங்களது நோக்கமாகும்; முதியோர்களுக்கு கிடைக்க வேண்டிய மரியாதையை வழங்குவதும் மற்றும் கண்ணியத்தோடு அவர்களை நடத்துவதும் நமது கடமை என்பதை சுட்டிக்காட்டுவது எமது குறிக்கோள்.” என்று கூறினார்.
இந்த விழிப்புணர்வு திட்டத்தின் தொடக்கவிழா 2023 அக்டோபர் 1-ம் தேதியன்று நடைபெற்றது. போக்குவரத்து சந்திப்புகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த செய்திகளின் வழியாக, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகத்தில் பரப்புரை திட்டம் இம்மாதம் முழுவதிலும் நடைபெறும். இந்த முயற்சியானது, மக்கள் மத்தியில் உரையாடல்கள் நிகழ்வதற்கு வழிவகுக்கும் மற்றும் முதியோர்களின் நலத்திற்கு முன்னுரிமையளிக்க தனிநபர்களையும் மற்றும் அமைப்புகளையும் ஊக்குவிக்கும் என்று அதுல்யா சீனியர் கேர் நம்புகிறது.
மூத்த குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் பொறுப்புறுதியுடன் உதவப்படும் வாழ்விட வசதிகளை வழங்கும் துறையில் புகழ்பெற்ற நிறுவனமாக அதுல்யா சீனியர் கேர் இயங்கி வருகிறது. சுதந்திரமான வாழ்க்கை, உதவப்படும் வாழ்க்கை மற்றும் நினைவுத்திறனை பேணும் பராமரிப்பு உட்பட, முதியோருக்கான வாழ்க்கை விருப்பத்தேர்வுகளின் விரிவான தொகுப்பின் வழியாக, முதியோர்கள் உற்சாகத்தோடும், தைரியத்தோடும் வாழ்வதற்கு அவர்களின் திறனையும், நம்பிக்கையையும் பேணி வளர்க்கின்ற வசதியான சூழலையும், அமைவிடங்களையும் அதுல்யா உருவாக்குகிறது. மூத்த குடிமக்களுக்கு மரியாதையையும், கண்ணியத்தையும் மற்றும் கருணையோடு கூடிய புரிந்துணர்வையும் ஊக்குவிப்பதில் தன்னை இந்நிறுவனம் அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறது.