WhatsApp | 9087316855
Advertise

Atulya Senior Care promotes diabetes management specially designed to improve the quality of life of the elderly

முதியோரின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நீரிழிவு மேலாண்மையை ஊக்குவிக்கும் அதுல்யா சீனியர் கேர்

கோயம்புத்தூர், நவம்பர் 14, 2023: உலகளவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் அதிக ஆயுள்காலத்தை கொண்டிருப்பது தொடர்வதால் முதியவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இதன் பின்விளைவாக வயதுவந்த முதியோர்கள் மத்தியில் நீரிழிவு பாதிப்பு வளர்ச்சியடைந்துவரும் கவலைக்குரிய அம்சமாக இப்போது மாறியிருக்கிறது. மூத்த குடிமக்களுக்காக தனிச்சிறப்பாக வடிவமைக்கப்பட்ட, திறன்மிக்க நீரிழிவு மேலாண்மைக்கு நிலவும் அவசரத் தேவையை அதுல்யா சீனியர் கேர் நன்கு உணர்ந்திருக்கிறது. முதியோர்களின் இந்த தனித்துவமான சுகாதார பராமரிப்பு தேவைகளை எதிர்கொள்வதற்காக, நீரிழிவுக்கான சிகிச்சை பராமரிப்பில் ஒரு முழுமையான அணுகுமுறையை ஊக்குவிப்பதில் அதுல்யா சீனியர் கேர் முன்னிலையில் இருக்கிறது. முதியோருக்கென வடிவமைக்கப்பட்ட உடற்பயிற்சிகள், உணவுமுறை கட்டுப்பாடு மற்றும் தனிச்சிறப்பான மேற்பார்வை ஆகியவற்றை வலியுறுத்துவதாக இந்த அணுகுமுறை இருக்கிறது.

முதியோர்களின் திறன்களுக்கேற்ப வடிவமைக்கப்படும் உடற்பயிற்சிகள் உட்பட உடல்சார் செயல்பாடுகள், நீரிழிவு மேலாண்மையில் மிக முக்கியமானவை. வயதுமுதிர்ந்த நபர்களுக்கு பொருத்தமான, அவர்களால் சிரமமின்றி செய்யக்கூடிய உடற்பயிற்சிகள் மற்றும் உடல்சார் நடவடிக்கைகளில் அவர்களை ஈடுபட வேண்டுமென அதுல்யா சீனியர் கேர் அறிவுறுத்துகிறது. எந்தவொரு உடற்பயிற்சி அல்லது உடற்தகுதிக்கான எந்தவொரு உடற்பயிற்சி அல்லது உடற்தகுதிக்கான நடவடிக்கைகளை தொடங்குவதற்கு முன்பு ஒரு நபரின் உடல்சார் திறன்களை மதிப்பீடு செய்வது பாதுகாப்பான மற்றும் திறன்மிக்க நீரிழிவு மேலாண்மையை உறுதிசெய்கிறது. இதன் மூலம் அவரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், நலவாழ்வையும் மேம்படுத்துகிறது. அதுல்யா சீனியர் கேரின் குடியிருப்பு வளாகம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தோட்டங்கள் மற்றும் திறந்தவெளி பகுதிகளை கொண்டிருப்பதால் குடியிருப்பாளர்களால் யோகா, ஏரோபிக்ஸ் மற்றும் உடற்பயிற்சிகளை செய்வதற்கு அது பயன்படுத்துகிறது. அப்பகுதிகளில் பாதுகாப்புடன் சுறுசுறுப்பாக நடைபயிற்சிகளை மேற்கொள்வதையும் இது அனுமதிக்கிறது. முதியோர்களின் பாதுகாப்பும், நலனும் மிக முக்கியமானவை என்பதால் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இங்கு மிகக்கவனமுடன் எடுக்கப்படுகின்றன.

நீரிழிவு மேலாண்மையில் உணவுமுறை விருப்பத்தேர்வுகள் மிக இன்றியமையாப் பங்கை ஆற்றுகின்றன; இது குறிப்பாக வயது முதிர்ந்தவர்களுக்கு பெரிதும் பொருந்தும். இது மிக முக்கியமானது. உணவு வேளைகளின்போது மாவுச்சத்துள்ள உணவுகளை அதிகளவில் உட்கொள்வதை தவிர்ப்பதும் முதியோர்களுக்கு உகந்த உணவுகளை உட்கொள்ளும் நடைமுறையை கடைப்பிடிப்பதும் இதில் அடிப்படையான செயல்உத்திகளாகும். உணவுமுறை சார்ந்த நடைமுறைகளை இந்த உணவுமுறை முடிவுகள், இரத்தச்சர்க்கரை அளவுகளை ஒழுங்குமுறைப்படுத்தி சீராக்குவதில் உதவுகின்றன; இதன் மூலம் நீரிழிவு பிரச்சனையை எதிர்கொள்கிற வயதான நபர்களுக்கு மேம்படுத்தப்பட்ட உடல் ஆரோக்கிய முடிவுகள் உறுதிசெய்யப்படுகின்றன. அதுல்யா சீனியர் கேர் – ல் வசிக்கும் முதியோர்களுக்கு அவர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட தேவையின் அடிப்படையில் உட்கொள்ள வேண்டிய உணவுகளை ஒரு ஊட்டச்சத்து நிபுணர் திட்டமிடுகிறார். அத்திட்டத்தின் அடிப்படையிலேயே உணவுகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.

தினசரி நடவடிக்கையில் நடைப்பயிற்சியை ஒரு இன்றியமையா அம்சமாக இடம்பெற செய்வதும் மற்றும் படிப்படியாக அதன் வேகத்தையும், தீவிரத்தையும் அதிகமாக்குவதும், திறன்மிக்க நீரிழிவு மேலாண்மைக்கு உதவுகிறது. குறைந்த தாக்கம் ஏற்படுத்தும் உடற்பயிற்சியாக நடைப்பயிற்சி இருப்பதால் இரத்தச்சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்த அது உதவுகிறது; இதயநாள ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் முதியோரின் நகர்வுத்திறனை இது சிறப்பாக உயர்த்துகிறது. முதியோர்களது பொதுவான உடல்நலத்தை மேம்படுத்துவதற்கு அவர்களது தினசரி செயல்பாடுகளில் நடைப்பயிற்சியை தவறாமல் மேற்கொள்ளுமாறு அதுல்யா சீனியர் கேர் அவர்களை ஊக்குவிக்கிறது.

வயது முதிர்ந்த நபர்களுக்கு நீரிழிவும் இருக்குமானால், முதுமையின் காரணமாக வரக்கூடிய பல நோய்களுக்கு ஆளாகும் அதிக இடர்வாய்ப்பில் அவர்கள் இருக்கின்றனர். பலவீனம், மனச்சோர்வு, அறிவுத்திறன் குறைதல், கீழே விழுதல், எலும்பு முறிவுகள் மற்றும் திறனிழப்பு ஆகியவை முதுமையில் வழக்கமாக வரக்கூடிய நோய் அறிகுறிகளுள் சிலவாகும். இந்த பாதிப்பு அறிகுறிகளை நிர்வகிப்பது, மருத்துவ பணியாளர்களுக்கு சவாலாகவே இருக்கிறது. இந்த தனித்துவமான சவால்களுக்கு தீர்வு காண்பதிலும், முதியோர்களின் நலவாழ்வை உறுதிசெய்ய நிபுணத்துவ வழிகாட்டலையும், தளராத ஆதரவையும் வழங்குவதில் அதுல்யா சீனியர் கேர் சிறப்பு கவனமும், நிபுணத்துவமும் கொண்டிருக்கிறது.

அவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகள் நெறிமுறையின் மேலாண்மையில் சிரமங்களை எதிர்கொள்ளும் முதியோருக்கு, தனிச்சிறப்பான மேற்பார்வையின் உதவியும் இன்றியமையாததாக மாறிவிடுகிறது. எனவே உதவப்படும் வாழ்க்கை அல்லது இல்ல அடிப்படையிலான உடல்நல பராமரிப்பு போன்ற சேவைகளின் முக்கியத்துவத்தை அதுல்யா சீனியர் கேர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மூத்தக் குடிமக்கள், அவர்களுக்கு அவசியமான பராமரிப்பையும், கவனிப்பையும் பெறுவதை இச்சேவைகள் உறுதி செய்கின்றன. இதன் மூலம் அவர்களது நீரிழிவு நிலையை அவர்கள் திறம்பட நிர்வகிக்கவும் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்தவும் அதுல்யாவின் இச்சேவைகள் உதவுகின்றன.

அதுல்யா சீனியர் கேர் – ல் நீரிழிவு பாதிப்பு இருக்கின்ற போதிலும் ஆரோக்கியமான, அதிக நிறைவான வாழ்க்கையை அவர்கள் நடத்துவதை ஏதுவாக்கும் வகையில் அவர்கள் திறனதிகாரம் பெற்றவர்களாக இருப்பதை உறுதி செய்யும் குறிக்கோளில் நாங்கள் தளராத பொறுப்புறுதி கொண்டிருக்கிறோம். பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உணவுமுறை கட்டுப்பாடு மற்றும் தனிச்சிறப்பான மேற்பார்வை ஆகியவற்றை வலியுறுத்துவதன் வழியாக முதியோரின் நலவாழ்வை மேம்படுத்துவது எமது நோக்கமாகும்; முதியோருக்கு ஒளிமயமான, நம்பிக்கையான மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்தை எமது தனிச்சிறப்பான சேவைகளின் மூலம் நாங்கள் வழங்குவதை உறுதிசெய்கிறோம்” என்று அதுல்யா சீனியர் கேர் – ன் பொது மருத்துவர் டாக்டர் எம். உமாபதி கூறினார்.

முதியோரின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி மகிழ்ச்சியுடனும், மனநிறைவுடனும் அவர்கள் வாழ்வதை உறுதிசெய்யும் குறிக்கோளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் அதுல்யா சீனியர் கேர், முதியோருக்கான பராமரிப்பு சேவையை வழங்கும் தொழிற்பிரிவில் முதன்மை வகிக்கிறது. தனிப்பயனாக்கப்பட்ட, விரிவான பராமரிப்பு சேவையின் மீது கூர்நோக்கமும், நிபுணத்துவமும் கொண்டிருக்கும் அதுல்யா சீனியர் கேர் பல்வேறு சேவைகளின் தொகுப்பை திறம்பட வழங்கி வருகிறது. இதில் தேவைப்படும் வாழ்க்கை, இல்ல அடிப்படையிலான சுகாதார பராமரிப்பு மற்றும் நீரிழிவு மேலாண்மைக்கு தனிச்சிறப்பான ஆதரவு ஆகியவையும் உள்ளடங்கும். முதியோர்களது நலவாழ்வை மேம்படுத்துவதில் பொறுப்புறுதியுடன் செயல்படும் அதுல்யா சீனியர் கேர், அவர்களுக்கு உயர்தர வாழ்க்கையை உறுதிசெய்வதற்கு நிபுணத்துவ வழிகாட்டலையும், தளர்வில்லாத ஆதரவையும் வழங்கி வருகிறது.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe