WhatsApp | 9087316855
Advertise

Awareness and book launch program on liver protection video

கல்லீரல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் புத்தகம் வெளியீட்டு நிகழ்ச்சி

கோவைப்புதூரில் உள்ள  வி எல் பி ஜானகி அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அலையன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் ஹில்சிட்டி மற்றும் விஜிஎம் மருத்துவமனை இணைந்து கல்லீரல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு மற்றும் கல்லீரல் பாதுகாவலன் என்ற புத்தகம் வெளியீட்டு நிகழ்ச்சியை இன்று காலை நடத்தியது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராமமூர்த்தி வரவேற்பு உரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக இந்து குரூப் ஆஃப் பப்ளிகேஷன் கோயம்புத்தூர் பொது மேலாளர் சிவக்குமார் கலந்துகொண்டு மாணவர்களிடையே சிறப்பு உரையாற்றினார். தொடர்ந்து கல்லீரல் பாதுகாவலன் என்ற புத்தகத்தை கல்லூரி முதல்வர் ராமமூர்த்தி வெளியிட, இந்து குரூப் ஆஃப் பப்ளிகேஷன் கோயம்புத்தூர் பொது மேலாளர் சிவக்குமார் பெற்றுக் கொண்டார்.
பின்னர் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இந்த புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், வி ஜி எம் மருத்துவமனையின் மருத்துவர் மித்ரா பிரசாத் மாணவர்களிடையே கல்லீரல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு அலையன்ஸ் கிளப் கோவை மாவட்ட புற்றுநோய் நோய் விழிப்புணர்வு தலைவர் பிரபாகரன், அலையன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் ஹில் சிட்டி தலைவர் சதீஷ் மற்றும் செயலாளர் சரவணன் ராஜா, கல்லூரி துணை முதல்வர் வாசுதேவன், அலையன்ஸ் வள்ளியம்மாள்,  பேராசிரியர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe