WhatsApp | 9087316855
Advertise

Ayurvedic Medical Camp organized by Aalam Holistic Wellness Centre video

ஆலம் ஹாலிஸ்டிக் வெல்னஸ் சென்டர் சார்பில் ஆயுர்வேத மருத்துவ முகாம்

ஆலம் ஹாலிஸ்டிக் வெல்னஸ் சென்டர் சார்பில் ஆயுர்வேத மருத்துவ முகாம்

ஆலம் ஹாலிஸ்டிக் வெல்னஸ் சென்டர் சார்பில் மார்ட்டின் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி, ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் ஆக்ருதி மற்றும் ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் ஜென்னித் இணைந்து ஆயுர்வேத மருத்துவ முகாம் கோவை ஆர் எஸ் புரத்தில் உள்ள ஆலம் ஹாலிஸ்டிக் வெல்னஸ் சென்டரில் நடத்தியது. இந்த மருத்துவ முகாமினை மாட்டின் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் லீமாரோஸ் மார்டின் தலைமையில் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைக்கப்பட்டது.

இந்த ஆயுர்வேத மருத்துவ முகாமில் கீல்வாதம், ஒற்றைத் தலைவலி, மாதவிடாய் பிரச்சனை, குழந்தையின்மை, ஆஸ்துமா, முடி உதிர்தல், எலும்பு தேய்மானம், மூட்டு வலி, முதுகு வலி, உடல் பருமன், ரத்த பரிசோதனை போன்ற அனைத்து வியாதிகளுக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கான இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்

இந்த நிகழ்வில் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் ஆக்ருதி நிர்வாகிகள் கவிதா கோபாலகிருஷ்ணன், ஹேமா புருஷோத்தமன், வித்யா ரமேஷ், துளசி சேது, குளோரி ஜான் பிரிட்டோ, ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் ஜென்னித் கிளப் நிர்வாகிகள் சதீஷ்குமார், வித்ய பிரகாஷ் மற்றும் ஆலம் ஹாலிஸ்டிக் வெல்னஸ் சென்டர் இயக்குனர் கிருஷ்டி உஷா மற்றும் மருத்துவர் நிஷா பிரியங்கா மற்றும் மருத்துவர்கள், நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe