WhatsApp | 9087316855
Advertise

‘Beautiful Giants’ Music Launch event

அழகான ராட்சசிகள்” திரைப்பட்டத்தின் இசை வெளியீட்டு விழா

அழகான ராட்சஸிகள்” திரைப்பட்டதின் இசை வெளியீட்டு விழா-நிகழ்ச்சியில் கேமராமேன், நடிகைகளை கலாய்த்த நடிகர் ரோபோ சங்கர்..

இன்வான் ப்ரொடக்ஷன்ஸ் இலியாஸ் அண்ட் ஹாரிஸ்கா தயாரித்து வழங்கும் அழகான ராட்சஸிகள் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோவை ராம்நகர் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது..ஏர்.ஆர்.ரஷீத் எழுதி,இயக்கியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர், நிகீஸ் இசையமைப்பாளர் முகேஷ் மற்றும் தயாரிப்பு நிர்வாகி சமது குட்டியாடி மற்றும் சஜீர் நடிகைகள் . நேகா தேஷ் பாண்டே, பெஃரா, மீலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Ads

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக நடிகர் ரோபோ ஷங்கர் அவரது மனைவி, மகள் இந்திரா மற்றும் திரைப்படக்குழுவினர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கோவை மாநகர மத்திய உதவி காவல் ஆணையர் சேகர் இசைத்தட்டை வழங்க நடிகர் ரோபோ ஷங்கர் பெற்றுகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் இல்யாஸ் இவ்வளவு வேகமாக இந்தபடத்தின் இசை வெளியீடு நடப்பது மிகவும் மகிழ்ச்சி எனவும் அவ்வளவு வேகமாக எடுக்கப்பட்ட படம் விரைவில் வெளியாகும் என தெரிவித்தார்.

நடிகை பெஃரா பேசும் போது
தன்னுடைய முதல் தமிழ் படம் என்பதால் மகிழ்ச்சியாக உள்ளது எனவும் நினைத்து பார்க்க முடியாத அளவு விரைவில் திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளனர் என தெரிவித்தார்.இதனைத்தொடர்ந்து பேசிய நடிகை மீலு,அடுத்த படமும் தமிழில் நடிக்க வேண்டும் என்ற வாய்ப்புக்காக காத்திருப்பதாகவும் தன்னுடைய பெரிய ஆதரவு தன் அம்மா தான்,தனது தாய் நினைக்கிற அளவுக்கு பெரிய இடத்திற்கு நான் போவேன் என நம்பிக்கை தெரிவித்தார்.

இறுதியாக பேசிய நடிகர் ரோபோ ஷங்கர், அப்துல்கலாமின் எட்டாம் ஆண்டு நினைவு தினத்தில் இசை வெளியீட்டு விழா நடத்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும்,குறைந்த காலத்தில் படத்தை எடுத்து முடிப்பது சாத்தியமானது கிடையாது எனவும் அதற்காக இயக்குநருக்கு நன்றி தெரிவித்தார்.அடுத்தபடத்திற்கு சார்ஜாவிற்கு தயாரிப்பாளர் அழைத்து செல்வதாக கூறி இருப்பதாகவும் அதற்கும் நான்கு டிக்கெட்டிகள் போட வேண்டும் என கிண்டலடித்த ரோபோ ஷங்கர்,இந்த நிகழ்ச்சி இசை வெளியீடு மாதிரி இல்லாமல் ஒரு கார்பரேட் ஷோ மாதிரி இருக்கிறது என தெரிவித்தார்.

மேலும் இப்படி ஒரு இசையமைப்பாளரை தான் வாழ்க்கையிலேயே பார்த்தில்லை எனவும் இரவு பகலாக உழைத்து இசையமைப்பாளர் எவ்வளவு இளைத்து போய்விட்டதாக நகைச்சுவையாக பேசினார்.எடிட்டரை பார்த்ததும் செண்டை மேளம் வாசிக்கறவரு நினைச்சேன்,எடிட்டர் இல்லையாம் கேமிரா மேன்,கேமிராமேன் பேசமாட்டேன் என்றார். ஆனால் லென்ஸ் வழியாக பேசி அழகான ராட்ஸிகள் திரைப்படத்தில் பேசி இருக்கிறார்,

இந்த திரைபடத்தின் எழுத்தை படிக்கிறதுக்கு தனக்கு 15 நாட்கள் ஆனது கவுன்டர்களை அடுக்கிய ரோபோஷங்கர், பேன் இந்தியா மூவியா இருக்கும் னு நினைத்தேன்,பேன் இந்தியா எடுக்கும் தகுதி இயக்குநருக்கு இருக்கிறது எனவும் திரைபடத்தின் எழுத்தில் யோசிக்க வைத்த இயக்குநர் படத்திலும் நம்மளை யோசிக்க வைப்பார் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ரோபோ ஷங்கர்,ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் போலீசாரின் உடைய போட்டுகொண்டு மவுண்ட் ரோட்டில் நிற்கமுடியாது என போலீசாரின் பணி குறித்து பேசிய ரோபோ ஷங்கர், தங்கள் குடும்பத்திலேயே எல்லோருமே சுயம்பு தான் எனவும் தற்போது தனது அண்ணன் மகன் இந்த படத்தில் நடன இயக்குநராக களமிறங்கியிருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

மேலும் தனக்கு மட்டும் மேக்-அப் போட வரலியே அம்மா லதா அம்மா என தனது அண்ணியை கிண்டலடித்த ரோபோ ஷங்கர்,எஸ்.ஏ.சந்திரசேகர்,விஜய்,கமல்ஹாசன்,அஜித், விஜய்சேதுபதி ஆகியோரின் குரலில் பேசி ரோபோ ஷங்கர்,கோயம்புத்தூர் வந்து கோட்சூட் கேவல பட்டிருக்கேன் பாரு என அரங்கை சிரிப்பலையில் மூழ்கச்செய்தார். இசை வெளியீட்டு விழா சென்னையில் வைக்காதீங்க, கோயம்புத்தூரீலேயே வைங்க என கோயம்புத்தூர் தமிழில் வேண்டுகோள் விடுத்த ரோபோ ஷங்கர்,தகிட தகிட டேன்ஸ் ஆடுமாறு ரசிகர் கேட்க அதற்கு அந்த மாதிரி,அந்த பாட்டுக்கு அப்படி ஆடக்கூடாது என நகைச்சுவையாக அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறீர்கள் எப்போது ஹீரோவாக நடிக்க போகீறீர்கள் என்ற தொகுப்பாளரின் கேள்விக்கு எப்பொழுதோ மக்கள் மனதில் நான் ஹீரோதான் என பதிலளித்தார்.

சிரித்துக்கொண்டே இருந்தால் வாழ்க்கை அவ்வளவு அழகாக இருக்கும் கடந்த ஐந்து மாத்ததில் படுத்தபடுக்கையாக கிடந்த தான் ஆரோக்கியமாக நிற்பமற்கு தனது குடும்பமும்,சிரிப்பும் தான் காரணம் எனவும் இப்போது குடும்பமே உடற்பயிற்சி செய்கிறது எனவும் உணவு பழக்கம்,உடற்பயிற்சியும் முக்கியம் எனவும் முதலில் என் மனைவி உக்கார மூன்று இருக்கை வேணும். ஆனால் இப்போ ஒரே இருக்கையி்ல் அமர்ந்துள்ளார் அவ்வளவு மெலிந்துள்ளார் என தெரிவித்தார்..தனது மருமகன் ஒரு படம் இயக்கி வருகிறார், அது முடியும்போது ஆறு மாதத்தில் ஒரு நல்ல செய்தி வரும் எனவும் பழைய கஞ்சியும் வெங்காயமும் எனக்கு சிறந்த மருந்தாக தோன்றுகிறது எனவும் தெரிவித்தார்..

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe