மாநகராட்சி பள்ளிக்கு Smart Class Room-க்கு தேவையான மின்சாதனங்களை வழங்கிய பாரத மாதா நற்பணி அறக்கட்டளை
கோவை புலியகுளம் மாநகராட்சி பள்ளிக்கு Smart Class Room-க்கு தேவையான மின்சாதனங்களை வழங்கிய பாரத மாதா நற்பணி அறக்கட்டளை
கோவை உடையாம்பாளையம் பகுதியில் உள்ள பாரத மாதா நற்பணி அறக்கட்டளை தொடர்ந்து பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. அதனை தொடர்ந்து
கோவை புலியகுளம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயிலும் ஏழை- எளிய மாணவ மாணவிகளின் நலன் கருதி பள்ளியின் தலைமையாசிரியர் அவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று மாணவ மாணவிகளின் கல்வித்திறனை மேலும் வளர்க்கும் பொருட்டு கணினி வழியில் கல்வி பயில ஏதுவாக 3- Smart Class Room அமைப்பதற்கு தேவையான மின் சாதனங்களை வழங்கியதுடன் அதை பொருத்துவதற்கு சிறந்த மின்பணியாளர்களையும் அனுப்பி சிறந்த முறையில் Smart class Room அமைத்து கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில், பாரத மாதா நற்பணி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கெளரி சங்கர், மாசாணியம்மன் எலக்ட்ரிக்கல்ஸ்
முகேஷ், கருப்புசாமி, பள்ளி தலைமையாசிரியர் ஜாய்ஸ் வினோதா*மற்றும் ஆசிரியர் பகலவன், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.