பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோவை சின்ன வேடம்பட்டியில் உள்ள சிஎம்எஸ் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் ஜெம் மருத்துவமனை சார்பில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அலையன்ஸ் கிளப் இன்டர்நேஷனல் புற்றுநோய் விழிப்புணர்வு மாவட்டத் தலைவர் பிரபாகரன் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி துணை முதல்வர் பேராசிரியர் சுஜாதா வரவேற்புரை வழங்கினார்.
லேப்ராஸ்கோபிக் & ரோபோடிக் சர்ஜன் மற்றும் மகப்பேறு புற்றுநோயியல் துறையின் டாக்டர். டி. கவிதா யோகினி மகப்பேறு புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து உரையாற்றினார்.
நிகழ்ச்சிக்கு, தலைவர் ராஜகோபாலன், துணைத் தலைவர் அசோக், செயலாளர் வேணுகோபால், துணைச் செயலாளர் கணேஷன், பொருளாளர் ரவிக்குமார், கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் நடராஜன், இணை ஒருங்கிணைப்பாளர் ஜெயபத்மா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்படினை அலையன்ஸ் கோமதிஈஸ்வரன் செய்திருந்தார்.