அலையன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் ஹில்சிட்டி சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோவை சுங்கம் பகுதியில் உள்ள நிர்மலா மகளிர் கல்லூரியில் அலையன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் ஹில் சிட்டி சார்பில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நிர்மலா மகளிர் கல்லூரி தாவரவியல் துறை தலைவர் கரோலின் ஜோ ரோசாரியோ வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக அலையன்ஸ் கிளப் கோவை மாவட்ட ஆளுநர் ஸ்ரீனிவாச கிரி கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து மாணவர்களிடையே கோயம்புத்தூர் விஜிஎம் மருத்துவமனையின் மருத்துவர் மித்ரா பிரசாத் மாணவிகளிடையே விளக்கி கூறினார். இப்போது அவர் மாணவிகளிடையே உரையாற்று கையில், புற்றுநோய் எவ்வாறு உருவாகிறது என்பது பற்றியும், புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கோவை மாவட்ட அலையன்ஸ் கிளப் ஹில்சிட்டி புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் கோவை மாவட்ட அலையன்ஸ் சங்கத்தின் மாவட்ட அமைச்சரவை ஆலோசகர் பிரபாகரன் செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில், அலையன்ஸ் கிளப் முதல் பெண் மாவட்ட மண்டல தலைவர் பிரியா எஸ் கிரி, வட்டார தலைவர் சதீஷ்குமார், செயலாளர் குமரேசன் மயில்சாமி, பிஆர்ஓ சர்வானா ராஜா மற்றும் நிர்மலா மகளிர் கல்லூரியின் தாவரவியல் துறை பேராசிரியர்கள், 100க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.