WhatsApp | 9087316855
Advertise

Chief Minister M. K. Stalin is proud of Ariyalur district

அரியலூர் மாவட்டத்தை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

கங்கை கொண்ட சோழபுரம் என்ற பெருமையை கொண்ட மாவட்டம் அரியலூர்- முதல்வர் மு.க.ஸ்டாலின்.டால்மியாபுரம் என்ற பெயரை கல்லக்குடி என்று மற்ற ரயில் மறியல் போராட்டம் நடத்தி தலைவராக கலைஞர் உயர்ந்த மாவட்டம் அரியலூர்.எங்கு திரும்பினாலும் பொக்கிஷமாக காணப்படும் மாவட்டம் அரியலூர்.பெரம்பலூர் மாவட்டத்தை பிரித்து அரியலூர் மாவட்டத்தை உருவாக்கியவர் கலைஞர்.தொல்லியல்துறையில் ஒரு மறுமலர்ச்சியையே உருவாக்கி உள்ளோம்.கங்கை கொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். அரியலூர் மாவட்டத்தில் சிமெண்ட் காரிடார் திட்டம் செயல்படுத்தப்படும். அரியலூர் – செந்துறை வரை ரூ.129 கோடி செலவில் 4 வழிச்சாலை அமைக்கப்படும். அரியலூர் மாவட்டத்தில் ரூ.10 கோடி மதிப்பில் புதை படிம பூங்கா அமைக்கப்படும். போட்டி போட்டு கொண்டு தொழில் நிறுவனங்கள் இன்று தமிழகத்துக்கு வருகின்றது. தமிழகத்தில் வேளாண் உற்பத்தி, பாசன பரப்பு அதிகரித்துள்ளது. கட்டணமில்லாமல் பேருந்து வசதி அளித்தன் மூலம் பெண்களுக்கு மாதம் ரூ.900 சேமிப்பு என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.ஒரு முதலமைச்சர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் கடந்த 10 ஆண்டாக இருந்த அதிமுக ஆட்சி.கையில் அதிகாரம் இருந்தும் எதுவும் செய்யாமல் கைகட்டி வேடிக்கை பார்த்ததுதான் கடந்த கால அதிமுக ஆட்சி. கடந்த 10 ஆண்டுகள் கால ஆட்சியின் சீரழிவை மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து புகார்கள் கொடுக்கின்றனர். விமர்சனங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல; அவற்றை வரவேற்கிறோம், ஆனால் விஷமத்தனம் கூடாது- அரியலூர் கொல்லாபுரத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe