“டான்டீ” தோட்ட தொழிலாளர்களை பாதுகாக்கின்ற வகையில் தமிழக முதல்வர் நடவடிக்கை: ஆ.ராசா பேச்சு
தேவாலாவில் திமுக பொதுக்கூட்டம் ஆ.இராசா எம்.பி., சிறப்புரையாற்றினார்.*
*நீலகிரி மாவட்டம், தேவாலா பஜாரில் நீலகிரி மாவட்ட திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் நடைபெற்றது.*
*நெல்லியாளம் நகர செயலாளர் சேகரன் அனைவரையும் வரவேற்றார்.*
*வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.*
*கூட்டத்தில் கழக துணை பொது செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா கலந்து கொண்டு,*”டான்டீ” தோட்ட தொழிலாளர்களை பாதுகாக்கின்ற வகையில் தமிழக முதல்வர் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து சிறப்புரையாற்றினார்.*
*கூட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு-பொதுக்குழு உறுப்பினர்கள், நகர-ஒன்றிய-பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், தோட்ட தொழிலாளர் தொழிற்சங்க பிரதிநிதிகள், அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், துணை தலைவர்கள், உறுப்பினர்கள், கழக முன்னணியினர் திரளாக கலந்து கொண்டனர்.*
*கூட்ட முடிவில் தலைமை செயற்குழு உறுப்பினர் திராவிடமணி நன்றி கூறினார்.*