WhatsApp | 9087316855
Advertise

Coimbatore BJP RS Puram Mandal staged a protest against the Tamil Nadu government video

கோவை மாவட்டம் பாஜக ஆர்.எஸ் புரம் மண்டல் சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்டம் பாஜக ஆர்.எஸ் புரம் மண்டல் சார்பில் தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் அறிவுறித்தலின்படி பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி ஆலோசனைபடி
தமிழக அரசின் பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு மற்றும் மின்சார உயர்வை கண்டித்து கோவை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து மண்டல் பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன் ஒருபகுதியாக கோவை மாவட்டம் பாஜக ஆர்.எஸ் புரம் மண்டல் சார்பில் காந்திபார்க் அருகே பாஜக ஆர்.எஸ் புரம் மண்டல் தலைவர் கவிதா தலைமையில் தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், opc அணி மாநில துணை தலைவர் கருமுத்து தியாகராஜன், மாவட்டத் துணைத் தலைவர் ஜெயா திலகா ஆகியோர் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையை நிகழ்த்தினார். தமிழக அரசின் பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு மற்றும் மின்சார உயர்வை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், ஊடக பிரிவு மாநில மாவட்ட துணை தலைவர் பிரேம் ஜி, நெசவாளர் அணி பிரிவு மாவட்ட தலைவர் சரண்யா ரவி, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் பாலாஜி, ஊடக பிரிவு மாநில மாவட்ட துணை தலைவர் சபரி, ஆர் எஸ் புரம் மண்டல் பொதுச் செயலாளர் மாரி முத்து, விருந்தோம்பல் பிரிவு மாவட்ட துணை தலைவர் மற்றும் மண்டல் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe