WhatsApp | 9087316855
Advertise

Coimbatore District All Style Karate Championship

கோயம்புத்தூர் மாவட்ட  ஆல் ஸ்டைல் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி 

கோயம்புத்தூர் மாவட்ட ஆல் ஸ்டைல் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி — 2023 நடைபெற்றது.

கோவை சுந்தராபுரம் பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் கோயம்புத்தூர் மாவட்ட ஆல் ஸ்டைல் கராத்தே சாம்பியன்ஷிப் மாவட்ட அளவில் கராத்தே போட்டி மிக சிறப்பாக நடைபெற்றது.

இப்போட்டியானது தேசிய நடுவரும் கோவை மாவட்ட தலைவருமான ஷிகான் விஜயகுமார் அவர்களும்
ரென்சி சிரில்வினோத் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை கோவை மாநகராட்சி துணை மேயர் இரா.வெற்றிச்செல்வன் அவர்கள் குத்துவிளக்கேற்றியும் வி.எல்.பி கல்லூரி முதல்வர் சதீஸ்குமார் அவர்கள் வாழ்த்துரையும் வழங்கினார்.


இதில் சிறப்பு விருந்தினர்களாக லயன்ஸ் கிளப் ஆப் குறிச்சி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் லயன்.N.மதிவாணன் அவர்களும் கலந்து கொண்டார். இதில் தனிநபர் கட்டா மற்றும் குமித்தே போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.

இதில் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்ளுக்கு மெடல் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில் லயன்ஸ் N.கருணாநிதி, கராத்தே பயிற்சியாளர்கள் மற்றும் மாணவ,
மாணவிகள், பெற்றோர்கள் என ஏராளமனோர் கலந்து கொண்டனர்….

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe