கோவை மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா 2023
கோவை மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா 2023 கே.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக கோவை மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா நவம்பர் 23,24 ஆம் தேதிகளில் கோவை சிங்கநல்லூரில் உள்ள கே.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
கே.எஸ்.ஜி கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஸ்ரீமதி கே.எஸ் கீதா தலைமையில், கே.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் எம். நாகராஜன், ஜெ.கே. பிசியோ தெரபி கல்லூரியின் முதல்வர் டாக்டர். எஸ். திருக்குமரன், தியாகி என்.ஜி.ஆர் பள்ளியின் தலைமையாசிரியர் சதாசிவம், கே.கே.நாயுடு பள்ளியின் தலைமையாசிரியர் கணேசன் ஆசிரியப்பயிற்றுனர் முருகேசன் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆசிரியப்பெருமக்கள் ,கல்லுரிப் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.
கலை திருவிழாவானது, அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வித் திறனோடு, கலைத் திறனைக் கண்டறியும் வகையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை கலைத் திருவிழாவை நடத்த முடிவு செய்தது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவ மாணவிகளுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதை அடுத்து, கடந்த கல்வி ஆண்டு முதல் அனைத்து மாவட்டங்களிலும் அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதில் கோவை மாவட்டத்தைச் சார்ந்த சுமார் 1500 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் தனிநபர் நடனம், குழு நடனம், பரத நாட்டியம், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது.
மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்கின்றனர். மாநில அளவில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன. அத்துடன் கலையரசன், கலையரசி என்ற விருதுகளும் வழங்கப்பட உள்ளன. மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களில் தர வரிசை அடிப்படையில் முதல் 20 மாணவ, மாணவிகள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளது. குறிப்பிடத்தக்கது.