WhatsApp | 9087316855
Advertise

Coimbatore Festival Special & Para Sports and ‘The Pitch’

கோயம்புத்தூர் விழாவின் ஸ்பெஷல் & பாரா ஸ்போர்ட்ஸ் மற்றும் ‘தி பிட்ச்’

சிறப்பு விளையாட்டு மற்றும் பாரா ஸ்போர்ட்ஸ் மூன்றாவது பதிப்பு இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் வியாழக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.

கோவை (வடக்கு) காவல் துணை ஆணையர் ஜி.சந்தீஷ், கவுமாரம் பிரசாந்தி சிறப்புப் பள்ளியின் நிறுவனர் தீபா மோகன்ராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர். அறிவுத்திறன் குறைபாடுள்ள, கற்றல் குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் மாற்று திறனாளி குழந்தைகள் சுமார் 200 பேர் பங்கேற்றனர்.

இந்த விளையாட்டுகள் சிறப்பு ஒலிம்பிக் விதிமுறைகளின்படி நடத்தப்பட்டன, ஏனெனில் இந்த குழந்தைகளின் திறமை அடையாளம் காணவும் ,பயிற்சியளிக்கவும் உதவும். இந்த ஆண்டு, டே க்வான் டோ, டேபிள் டென்னிஸ் மற்றும் பார்வையற்றோர் கால்பந்து போட்டி ஆகியவை நடத்தப்பட்டன.

டெல்லியில் நடந்த ‘கேலோ இந்தியா போட்டியில்’ பங்கேற்று பதக்கங்களை வென்ற வீரர்கள் முத்துராஜ், கீர்த்திகா, மனோஜ், அவினாஷ் கோபிநாதன் இந்நிகழ்வில் கலந்துகொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர். 

கோயம்புத்தூர் விழாவின் தலைவர் ராகுல் காமத் மற்றும் யங்  இந்தியன்ஸ் தலைவர் அஷ்வின் மனோகரன், உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் கோவைக்கு பெருமை சேர்த்த வீரர்களை கௌரவித்தனர்.

கோயம்புத்தூர் விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பிட்ச், முதலீட்டாளர்கள், இன்குபேட்டர்கள், ஆக்சிலரேட்டர்கள் மற்றும் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் மத்தியில் தொழில்முனைவோர் உணர்வை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு பாதையை உருவாக்கும் நிகழ்வாகும். கோயம்புத்தூர் விழாவின் முக்கிய நெறிமுறைகளுக்கு இணங்க இந்த நிகழ்வு, கோவையை சேர்ந்த வளரும் தொழில்முனைவோருக்கு  ஒரு தளம். இந்நிகழ்ச்சியில் 150 நபர்கள் கலந்து கொண்டனர். கோவை பழமுதிர் நிலையம் நிர்வாக இயக்குனர் செந்தில் நடராஜன் சிறப்புரையுடன் துவங்கியது. 

சிறப்புப் பேச்சாளர்கள் விஷ்ணு வர்தன், மற்றும் இந்திரா வித்யாபிரகாஷ் சிறப்புரையாற்றினர். ஜூரி குழுவில் வாசுகுமார், இந்திரா வித்யாபிரகாஷ் மற்றும் செந்தில் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe