WhatsApp | 9087316855
Advertise

‘Coimbatore Got Talent Show 2024’

 ‘கோயம்புத்தூர் காட் டேலண்ட் ஷோ 2024’ 

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் கோயம்புத்தூர் காட் டெலண்ட் ஷோ 2024 என்னும் மாணவர்களின் திறமைகளுக்கான போட்டிகள்  

வியாழக்கிழமை இன்று மாலை 3 மணி அளவில் நடைபெற்றது. கோயம்புத்தூர் விழா 2024 பதினாறாவது பதிப்பு ஜனவரி 2ஆம் தேதி முதல் 8-ம் தேதி வரை கோவையில் பல்வேறு பகுதிகளில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களின் திறமைகளை கண்டறியும் விதமாக ஆண்டு தோறும் கோயம்புத்தூர் காட் டேலண்ட் ஷோ மூலம் மாணவர்களின் திறமைகளை கண்டறியும் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கோயம்புத்தூர் காட் டேலண்ட் ஷோ 2024 போட்டியில் கோவை மாவட்டத்தில் இருந்து நூறுக்கும் க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். இப்போட்டியில் தனி நடனம், குழு நடனம், பாட்டுப்போட்டி, சிலம்பப் போட்டி, பரதநாட்டியம், இசைப்போட்டி, பறை இசை போட்டி, யோகா போட்டி என பல்வேறு வகையான போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் பங்கேற்ற மாணவர்களின் திறமைகளை நடுவர்கள் கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்தி கோயம்புத்தூ காட் டேலண்ட் ஷோ 2024 ஆம் ஆண்டிற்கான பட்டத்தினைை வழங்கினர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe