கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் 15ஆவது
பட்டமளிப்பு விழா.
கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் 15ஆவது
பட்டமளிப்பு விழா முனைவர் மா.ஆறுச்சாமி கலையரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவில் அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் வேந்தர் எஸ்.பி.தியாகராஜன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பட்டதாரிகளுக்குப் பட்டங்களை வழங்கிப் பட்டமளிப்பு விழா சிறப்புரையாற்றினார்.
அவர்தம் உரையில்,” தேசியக் கல்விக் கொள்கை 2020 இன் முதன்மையான நோக்கம் ஒரு தனிநபரின் அறிவுசார் அழகியல், சமூக, உடல், உணர்ச்சி நெறிமுறை மற்றும் தார்மீக அம்சங்களை ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் மேம்படுத்துவது ஆகும் என்று குறிப்பிட்டார். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் எழும் சவால்களை எதிர்கொள்ள மாணவ -மாணவியர்க்குப் பயிற்சி அளித்தல், புதிய கல்வித் திட்டங்களை அறிமுகம் செய்தல் மற்றும் இடைநிற்றலைத் தவிர்த்தல் ஆகியவற்றைப் புதிய கல்விக் கொள்கையின் மூலம் நிறைவேற்ற முடியும் என்று கூறினார்.