WhatsApp | 9087316855
Advertise

Coimbatore Park Education Group’s Golden Jubilee Teacher Award Celebration – Actor Kamal Haasan Attends

கோவை பார்க் கல்வி குழுமங்களின் பொன்விழா ஆசிரியர் விருது  கொண்டாட்டம் -நடிகர் கமலஹாசன் பங்கேற்பு

கோவை கணியூரில் அமைந்துள்ளது பார்க் கல்வி குழுமங்கள். இதன் பொன்விழா மற்றும் சிறந்த ஆசிரியர் விருது மற்றும் துரோணா விருது விழா கொண்டாட்டம் இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மக்கள் நீதி மய்யம் அமைப்பின் தலைவரும் உலக நாயகனுமான பத்மஸ்ரீ டாக்டர் கமலஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மறைந்த பார் கல்வி குழுமங்களின் நிறுவனர் திருமதி பிரேமா ரவி அவர்களின் அருளாசியுடன் நடைபெற்ற இந்த விழாவில் பார்க் கல்வி குழுமங்களில் நிறுவனரும் தலைவருமான டாக்டர் பி.வி ரவி, தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் அனுஷா ரவி மற்றும் செயலாளர் டி ஆர் கார்த்திக் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் பார்க் பொன்விழா ஆண்டு 2023 துரோணா 
அவார்டு முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானியும் “தி மூன் மேன் ஆஃப் இந்தியா” என்று அழைக்கப்படும் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை மற்றும் “கையொப்பம்”  நாவலுக்கு சாகித்திய அகாடமி விருது பெற்ற  கவிஞர்/எழுத்தாளர் புவியரசு ஆகியோருக்கு துரோணா விருது வழங்கப்பட்டது.

மேலும் பார்க் கல்வி குழுமங்களின் முன்னாள் மாணவர்களான சந்திராயன் மூன்று திட்ட அலுவலர்களான ரமேஷ் சுப்பிரமணியன் மற்றும் ஹரிஹரன் ஆகியோருக்கு முன்னாள் மாணவர்களுக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டது.
மேலும் விழாவில் முன்னாள் மாணவர்கள் பிக் பாஸ் சீசன் 6 புகழ் நடிகை ஷிவின் கணேசன், திரைப்பட தயாரிப்பாளர் கே விஜய் பாண்டி, ஆப்ஷன்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனரும் நிர்வாக இயக்குனருமான ம் சுஜித், யோகா போட்டியில் தேசிய அளவில் தங்கம் வென்ற யோகா டிரெயினர் வைஷ்ணவி உட்பட்டவர்களுக்கு சிறப்பு முன்னாள் மாணவர்களுக்கான விருது வழங்கி கெரவிக்கப்பட்டது. 

மேலும் கோவை மாநகரில் உள்ள 300 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 300 சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு  கௌரவிக்கப்பட்டார்கள்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe