WhatsApp | 9087316855
Advertise

Coimbatore Perur Youth Guidance Meeting

கோவை பேரூர் இளைஞர் வழிகாட்டும் ஆலோசனை கூட்டம் 

கோவை பேரூர் இளைஞர் வழிகாட்டும் ஆலோசனை கூட்டம் பேருரில் உள்ள அருந்ததியர் சமுக  மடத்தில் மாநில தலைவர் பெருமாள் தலைமையில் நடைப்பெற்றது. 

இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அருந்ததியர் உரிமைகள் பாதுகாப்பு இணைய தலைவர் டாக்டர். I.v. மணிவண்ணன் IAS (Retd)கலந்து கொண்டு சட்ட மாமேதை டாக்டர். அம்பேத்கர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பின்னர் சிறப்புரையாற்றினார் அப்பொழுது 1999ம் வருடம் மாண்புமிகு அன்றைய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் அருந்ததியர் சமூக மக்களுக்கு மூன்று சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சட்டமாக கொண்டு வந்தார் அதனைஇப்பொழுது வரைக்கும் முதல்வர் தளபதி மு.க ஸ்டாலின் அவர்கள் அருந்ததியர் சமுக மக்களுக்கு 3சதவீத உள் ஒதுக்கீடுக்கு  சட்ட பாதுகாப்பு வழங்கி வந்து கொண்டிருக்கிறார்.

மேலும் தமிழக அரசுக்கு அருந்ததியர் சமூக மக்களின்  உரிமைகள் சம்பந்த பட்ட  பிரச்சினை என்பதனால் கனிவுடன் அணுகுவதற்கு அருந்ததியர் சமூக மக்களின் சார்பாக நன்றி தெரிவிப்பதாக கூறினார். அருந்ததியரின் மூன்று சதவிகித இட ஒதுக்கீடு உச்ச நீதிமன்ற வழக்கில் இரண்டாம் கட்ட அமர்வு  நடைபெற உள்ளது. அருந்ததியர் சமூகத்திற்கு தீர்ப்பு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.

முன்னதாக பேரூர் அருந்ததியர் சமூக பொது நல அறக்கட்டளை சார்பில் டி.என்.பி.எஸ்.சி போட்டி தேர்வுகளில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கும், மற்றும் தையல் கலை பயிற்சி மாணவிகளுக்கும் பரிசளித்து கெளரவித்தனர்.

இதில் பேரூர் அருந்ததியர் சமூக நல அறக்கட்டளையின் தலைவர் செல்வகுமார், ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் சுகுமார், சென்னை அறிவொளி ஆனந்தராஜ், துணைத் தலைவர் மாறன், முன்னாள் தலைவர் வெள்ளிங்கிரி, ஆலோசகர் E.B நடராஜன்,திண்டுக்கல் கோவிந்தராஜ், பேராசிரியர் பழனிச்சாமி,முன்னாள் வங்கி அதிகாரி இளங்கோ கணேசன், தொழிலாளர் நலத்துறை  ரவிக்குமார், அன்னூர் ஊராட்சி மன்ற உறுப்பினர் மருதாச்சலம், திருமலைச்சாமி, எல்.ஐ.சி. நாகராஜ், வழக்கறிஞர்கள் சத்யநாராயணன், வெங்கடேஷ், உதவி அரசு வழக்கறிஞர் முத்துக்குமார் என ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe