ரோகன் போபண்ணா டென்னிஸ் அகாடமியுடன் கோவை ராக்ஸ் பள்ளிக்கூடம் புரிந்துணர்வு வீடியோ
கோவை ராக்ஸ் பள்ளிக்கூடம் தனது மாணவர்களுக்கு 2021 இல் டென்னிஸ் பயிற்சி அளிக்க ரோகன் போபண்ணா டென்னிஸ் அகாடமி உடன் கைகோர்த்தது. பள்ளியில் சுமார் 60 மாணவர்கள் அகாடமியில் டென்னிஸ் பயிற்சி எடுத்து வருகின்றனர்.
செய்தியாளர்களை சந்தித்த ரோஹன் போபண்ணா, “எனது சொந்த ஊரான பெங்களூருவைத் தவிர, கர்நாடகாவிற்கு வெளியே நாங்கள் வந்த முதல் நகரம் கோவை தான் இதுதான். ஒரு மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் ஒரு கட்டமைப்பை வழங்குவதும், பயணம் எதைப் பற்றியது என்பதை குழந்தைகள் கற்றுக் கொள்ளவும் புரிந்துகொள்ளவும் உதவுவதும், அவர்களுக்கு சிறந்த வழிகாட்டுதலை வழங்குவதே எங்கள் நோக்கம் என்றார். “சிறுவயதில் என்னிடம் இல்லாத ஆர்வமும், உத்வேகமும் இந்த குழந்தைகளிடம் உள்ளது, அவர்கள் விளையாட்டை ஆர்வமுடன் விளையாடுகின்றனர். இங்கு பயிற்சியானது மூன்று நிலைகளில் தயார்படுத்துகின்றோம். சிவப்பு/ஆரஞ்சு/பச்சை நிற பந்துகளுடன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால் தங்கள் திறனை மேம்படுத்தலாம், நுட்பங்களைக் கற்றுக் கொள்ளலாம் மற்றும் கட்டமைக்கப்பட்ட முறையில் வளரலாம்,” என்று அவர் கூறினார். “குழந்தைகள் விளையாட்டை ரசிப்பது ஏற்கனவே எங்களுக்கு கிடைத்த வெற்றியாகும். குழந்தைகள் மகிழ்ந்து முன்னேறும்போது, பெற்றோர்களும் பயணத்தைப் புரிந்துகொள்கிறார்கள். எங்கள் அகாடமி கோவையில் உள்ளது மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். “முன்பு இருந்ததை விட இன்று விளையாட்டு வளர்ந்துள்ளது. விளையாட்டின் மூலம் நிறைய தொழில்களை உருவாக்க முடியும். ஒரு முக்கிய விளையாட்டாக இந்தியாவில் டென்னிஸ் வளர்ந்து வருகிறது.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு ஒரு வாய்ப்பையும் ஊக்கத்தையும் கொடுக்க வேண்டும். மேலும் தனது குழு மூலம் மாணவர்களின் முன்னேற்றத்தை அறிந்துகொள்வேன். ராக்ஸ் பள்ளிக்கூடத்தில் பயிற்சிப் பாடங்களை வழங்கும் அனைத்து பயிற்சியாளர்களும் பயிற்சிபெற்ற அனுபவம் வாய்ந்தவர்கள். கோவை ராக் பள்ளிக்கூடத்திற்கு ஆண்டுக்கு மூன்று முறை வருகை தந்து மாணவர்குக்கு பயிற்சி அளிப்பேன், என்றார்.