WhatsApp | 9087316855
Advertise

‘Coimbatore Shopping Festival’ at Codissia Industrial Complex

கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் ‘கோயம்புத்தூர் ஷாப்பிங் ஃபெஸ்டிவல்’

கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் வரும் டிசம்பர் 23ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை 10 நாட்களுக்கு கோயம்புத்தூர் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் என்ற தலைப்பில் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் சதுர அடி அளவில் கண்காட்சி நடைபெற உள்ளது.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் கண்காட்சியின் தலைவர் ராஜேந்திரன், கொடிசியா தலைவர் திருஞானம், துணைத் தலைவர் நந்தகோபால், சதீஷ்குமார் ஆகியோர் கூறுகையில்,
மத்திய அரசின் கதர்கிராம தொழில்கள் ஆணையத்தின் மூலம் கைவினைஞர்கள் நேரடியாக பங்கேற்க உள்ளனர். இதில் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், உணவு ரகங்கள் மற்றும் விளையாட்டுடன் அமையப் பெற உள்ளது. கண்காட்சியில் இடம்பெறும் பல்வகை விற்பனை பொருட்கள் வீட்டு உபயோக சாதனங்கள் அலங்கார பொருட்கள் தங்கம் மற்றும் வைர நகைகள் பரிசு பொருட்கள், ஜவுளி வகைகள், பர்னிச்சர் வகைகள், சமையல் அறை சாதனங்கள் உட்பட பல்வேறு பொருட்கள் ஷாப்பிங் செய்வதற்காக அரங்குகள் பிரத்யோகமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயம்புத்தூர் ஷாப்பிங் திருவிழா 9வது பதிப்பாகும். குறிப்பாக இந்த கண்காட்சியில் நாவிற்கும் ஏற்ற வகையில் பல்வேறு விதமான திண்பண்டங்கள், சிற்றுண்டி மற்றும் உணவு வகைகள் கொண்ட அரங்குகளும் உள்ளது. இது தவிர பொழுதுபோக்கிற்காக தினமும் பட்டிமன்றம், இன்னிசை நிகழ்ச்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. இவர் அவர்கள் தெரிவித்தனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe