WhatsApp | 9087316855
Advertise

Commencement of 12,000 square foot grand hall at Coimbatore Kumaraguru College of Technology

கோவை குமரகுரு தொழில் நுட்ப கல்லூரியில் 12 ஆயிரம் சதுரடியில் பிரம்மாண்ட அரங்கம் துவக்கம்

சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்லூரியில் “சாராபாய் கலாம்” என்ற பிரம்மாண்ட அரங்கின் திறப்பு விழா மற்றும் துவக்கவிழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இந்த அரங்கை இஸ்ரோ-வின் முன்னாள் அறிவியல் செயலாளர் ஒய்.எஸ்.ராஜன் திறந்து வைத்தார்.கோவை சரவணம்பட்டி பகுதியில் குமரகுரு கல்லூரி இயங்கி வருகின்றது. இங்கு சுமார் 450 பேர் அமரும் வகையில் “சாராபாய் கலாம்” என்ற அரங்கத்தின் துவக்கவிழா நடைபெற்றது.

இதனை இஸ்ரோ-வின் முன்னாள் அறிவியல் செயலாளர் ஒய்.எஸ் ராஜன்ழ் ககன்யான் ஆலோசனை குழுவின் மூத்த உறுப்பினர் ராகேஷ் சர்மா ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.12 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்ட பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அரங்கில், மேம்படுத்தப்பட்ட ஆடியோ, காட்சி தொழில்நுட்பம், உன்னிப்பாக வடிவமைக்கப்பட்ட ஒலியியல் விளக்கு அம்சங்கள், எல்இடி சுவர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.மேலும், இந்த அரங்கில் சிம்போசியம் மூலமாக, அதிநவீன உச்சி மாநாடாடு மற்றும் நாடக நிகழ்ச்சிகளை நடத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சாராபாய் கலாம் அரங்கத்தின் திறப்பு விழாவில் குமரகுரு கல்லூரியின் தாளாளர் கிருஷ்ணராஜ் வானவராயர், துணை தலைவர் மாணிக்கம், தாளாளர் பாலசுப்பிரமணியம் துணை தாளாளர் சங்கர் வாணவராயர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe