WhatsApp | 9087316855
Advertise

Competition for Mexicans at the national level

தேசிய அளவில்  மெஜிசியன்களுக்கான போட்டி

இந்திய மாயாஜால பொழுதுபோக்கு சங்கம் சார்பில் “மிஸ்டிகா 2023” எனும் தலைப்பில் தேசிய அளவிலான மெஜிசியன்களுக்கான போட்டி நல்லாயன்  திருமணமண்டபத்தில்   ஜுனியர், சப்-ஜுனியர், சீனியர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இதில் டில்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 200 க்கும் மேற்பட்ட மெஜிசியன்களுக்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிபடுத்தினர்.

செயலாளர் மலர் கண்ணன் வரவேற்புரை ஆற்றினார்.சங்கத் தலைவர் கோவை நந்தா தலைமை வகித்தார். துணைத் தலைவர் அருண் , சகாயமேரி சூப்பர் செல்வம், மாயா பாலாஜி ஆகியோர் சிறப்புரையாற்றினார். காவல் உதவி ஆணையர் சேகர், பாதர்  மெல்கியோர் , சீனியர் மாயாஜால சக்கரவர்த்தி சங்கர் ஆகியோர்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் சவுகூர் செய்திருந்தார். 

நடைப்பெற்ற தேசிய அளவிலான போட்டியில் முதல் பரிசு சென்னை சேர்ந்த சித்தார்த், இரண்டாம் பரிசுகோவையை சேர்ந்த சுவஸ்திக் மற்றும்சீனியர் போட்டியில் முதல் பரிசு பெங்களூருசேர்ந்த ராஜன், இரண்டாம் பரிசு கோவையை சேர்ந்த விக்னேஷ் பிரபு இவர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கி கெளரவித்தனர். இறுதியில் பொருளாளர் மிர்லாணிலி அமர் நன்றி கூறினார்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe