WhatsApp | 9087316855
Advertise

Death row convicts who threw acid on police and escaped from court

போலீசார் மீது அமிலம் வீசி கோர்ட்டில் இருந்து தப்பியோடிய மரண தண்டனை குற்றவாளிகள்

வங்காளதேசத்தை சேர்ந்த எழுத்தாளர் அவிஜித் ராய். மதச்சார்பின்மை ஆதரவு கருத்துக்களை கொண்ட அவிஜித் ராய் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளார். இஸ்லாமிய மதத்தை பெரும்பான்மையாக கொண்ட வங்காளதேசத்தில் அவிஜித் ராய்க்கு எதிராக எதிர்ப்பு குரல்கள் நிலவி வந்தன. அவிஜித் இஸ்லாமிய மதத்திற்கு எதிராவும், மதச்சார்பின்மைக்கு ஆதரவாகவும் கருத்துக்களை தெரிவித்து வந்தார். இதனால், இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் அவிஜித் ராய்க்கு ஆபத்து நிலவி வந்தது. இதனிடையே, கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் டாக்காவில் நடந்த புத்தக கண்காட்சியில் பங்கேற்றுவிட்டு அவிஜித் ராய் தனது மனைவி ரபிடா பொன்யா அகமது உடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, அவர்கள் இருவரையும் இடைமறித்த இஸ்லாமிய மத அடிப்படைவாத கும்பல் அவிஜித் ராய் மற்றும் அவரது ரபிடாவை கூர்மையான ஆயுதங்களை கொண்டு தாக்கினர். இந்த கொடூர தாக்குதலில் அவிஜித் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். அவரது மனைவி ரபிடா தலையில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஆயுதமேந்திய இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் 2 பேர் கடந்த ஞாயிற்றுகிழமை டாக்கா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துவரப்பட்டனர். அப்போது, பைக்கில் வந்த சிலர் தாங்கள் வைத்திருந்த அமிலத்தை போலீசார் மீது வீசினர். இதனை தொடர்ந்து குற்றவாளிகள் 2 பேரும் கண்ணிமைக்கும் நேரத்தில் போலீசார் பிடியில் இருந்து தப்பியோடினர். தப்பியோடிய குற்றவாளிகள் 2 பேரும் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அன்சர் உல்லா பெங்லா என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து தப்பியோடிய மரண தண்டனை குற்றவாளிகள் 2 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe