கோவை பாஜக உக்கடம் மண்டலம் சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
கோவை மாவட்டம் பாஜக உக்கடம் மண்டல் சார்பில் தமிழக அரசின் பால் விலை உயர்வு கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் அறிவுறித்தலின்படியும் பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி ஆலோசனைபடி தமிழக அரசின் பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு மற்றும் மின்சார உயர்வை கண்டித்து கோவை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து மண்டல் பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன் ஒருபகுதியாக கோவை மாவட்டம் பாஜக உக்கடம் மண்டல் சார்பில் செட்டி வீதியில் பாஜக உக்கடம் மண்டல் தலைவர் சேகர் தலைமையில் தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்டம் துணை தலைவர் அம்மன் நாகராஜ், opc அணி மாநில துணை தலைவர் கருமுத்து தியாகராஜன் ஆகியோர் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையை நிகழ்த்தினார்.ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசின் பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு மற்றும் மின்சார உயர்வை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், ஊடக பிரிவு மாநில துணை தலைவர் சபரி, ஊடக பிரிவு மாவட்ட துணை தலைவர் சிவந்தனம் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.