WhatsApp | 9087316855
Advertise

Demonstration by Dravida Students’ Association against the imposition of Hindi

இந்தி திணிப்பை கண்டித்து திராவிட மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்தி திணிப்பை கண்டித்து திராவிட மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோவை மாவட்டம் திராவிட மாணவர் கழகம் நடத்தும் ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று மாலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திராவிட மாணவர் கழகம் மாநில துணை செயலாளர் ராகுலன் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் யாழினி வரவேற்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், சந்திரசேகர் வேலுச்சாமி பிரபாகரன் செந்தில்நாதன் ரங்கசாமி கலைச்செல்வி வீரமணி பரமசிவம் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிட கழகம் தலைமை கழக சொற்பொழிவாளர் வீரமணி கண்டனஉரை ஆற்றினார். அப்போது ஒன்றிய அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்தி திணிப்பை எதிர்த்தும் கண்டனம் முழக்கம் நடைபெற்றது. இதில் திராவிட கழக மண்டல செயலாளர் சிற்றரசு காளிமுத்து தமிழ் செல்வம் தேவிகா பிரபு ரங்கசாமி திராவிட மணி தமிழ்செல்வம் கார்த்திக் நாகராஜ் வின்சென்ட் வசந்தகுமார் தமிழ் செல்வன் கௌதம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe