WhatsApp | 9087316855
Advertise

Demonstration on behalf of All India Equality People’s Party demanding immediate implementation of complete prohibition -video

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பூரண மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பூரண மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்

அகில இந்திய சமத்துவ கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் ஆணைக்கிணங்க தமிழகத்தில் பூரணமது விலக்கை உடனடியாக அமல்படுத்தவும் போதை பொருள்களை ஒழித்திடவும் வலியுறுத்தி அறவழி விழிப்புணர்வு போராட்டம் கொங்கு தெற்கு மண்டல செயலாளர் உபைதுர் ரஹ்மான் தலைமையில் இன்று காந்திபுரம் பவர்ஹவுஸ் பகுதியில் நடைபெற்றது.

மாநில வர்த்தக அணி துணை செயலாளர் ஸ்டீல் ராஜன் போராட்டத்தை துவக்கி வைத்தார். மத்திய மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார். கோவை கிழக்கு மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டி, கோவை வடக்கு மாவட்ட செயலாளர் நேருஜி, கோவை மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் ஆனந்த், கோவை தெற்கு மாவட்ட செயலாளர் முரளி கிருஷ்ணன், நீலகிரி மாவட்ட செயலாளர் சுரேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில் அகில இந்திய சமத்துவ கட்சி சார்பில் மதுவிலக்கினை அமல்படுத்தக்கோரி மதுவினை சாலையில் ஊற்றியும் போதை பொருட்களை ஒழித்திட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் அகில இந்திய கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe