ஓம் சக்தி மருத்துவமனை சார்பில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஓம் சக்தி மருத்துவமனை நிறுவனர்கள் வேலுமணி ஜெயலட்சுமி தம்பதியனர் ஏற்பாட்டில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை சுகுணா திருமண மண்டபத்தில் 27ந் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. மேலும் சிறு தானிய பொருட்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து வேலுமணி ஜெயலட்சுமி தம்பதியினர் தெரிவித்ததாவது:
சர்க்கரை நோயிலிருந்து விடுபடவும் சர்க்கரை நோய் வராமல் தடுக்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை அவிநாசி ரோட்டில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் சிறுதானிய பொருட்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி சிறப்பு பட்டிமன்றமும் நடக்க உள்ளது. இதில் பங்கேற்க எவ்வித கட்டணமும் இல்லை.
நிகழ்ச்சியில் சக்கரை நோய் குறித்த விழிப்புணர்வு தொடர்பான நூல் வெளியிடப்பட உள்ளது. இந்நூலினை ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜ் வெளியிடுகிறார்.
முன்னாள் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் அசோக் பெற்றுக் கொள்கிறார். இதில் பல்வேறு நிபுணர்கள் பங்கேற்று சக்கரை நோய் குறித்து விளக்கமாக பேச உள்ளனர் என தெரிவித்தனர்.
முன்னதாக சிறுதானிய பொருட்காட்சி குறித்த விளக்க கையேட்டை டாக்டர் வேலுமணி வெளியிட அதனை இந்திய தொழில் வர்த்தக சபை செயலாளர் அண்ணாமலை பெற்றுக்கொண்டார்.